கன்னியாகுமரி, செப்.3 நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக உருவான நாள் 27.8.1944 (சேலம்). அதை குமரிமாவட்டத்தில் பொதுமக்களுக்குப் பரப்புரை செய்யும் வகையில் நிகழ்ச்சி 27.8.2025 அன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில், மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில், கழக காப்பாளர் ம.தயாளன் முன்னிலையில்நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பரப்புரையை தொடங்கி வைத்தார் மாவட்டக் கழக மேனாள் அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத் தலைவர் எஸ்.குமார தாசு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார், மகளிரணி செயலாளர் த.சிறீவள்ளி தயாளன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், குமரி நகர செயலாளர் க.யுவான்சு பொதுக்குழு உறுப்பினர் மா.மணி மாவட்ட கழக மகளிரணி தலைவர் சு.இந்திராமணி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்களுக்கு கழகத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.