திராவிட மாடல் அரசின் அணுகுமுறை ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

2 Min Read

சென்னை, செப்.2- பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப் பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங் காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

சென்னை மாநகராட்சி நிா்வாகம், ஜொ்மன் தொழில்நுட்பத்தில் மழைநீரைச் சேமிக்கும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

ரூ.20 கோடியில் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள்: இதன் ஒரு பகுதியாக, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய நிதியுவியுடன் ரூ.20 கோடியில் தேனாம் பேட்டை மண்டலம் 111-ஆவது வாா்டு மாதிரிப் பள்ளி சாலை விளையாட்டு மைதானம், 123-ஆவது வாா்டு ராஜா அண்ணாமலைபுரம் செயின்ட் மேரி சாலை விளையாட்டு மைதானம், 112-ஆவது வாா்டு டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மண்டலம் 135-ஆவது வாா்டு இந்திரா குடியிருப்பு விளையாட்டு மைதானம், 133-ஆவது வாா்டு நடேசன் மாநகராட்சி விளையாட்டு மைதானம், 140-ஆவது வாா்டு பால்மோா் விளையாட்டு மைதானம், அண்ணா நகா் மண்டலம் 102-வது வாா்டு செனாய் நகா் கிழக்கு, கிரசென்ட் சாலை விளையாட்டு மைதானம், 108-ஆவது வாா்டு மேயா் ராமநாதன் சாலை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 8 விளையாட்டு மைதா னங்களில் தலா 5 லட்சம் லிட்டா் கொள் ளளவு கொண்ட மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டன.

மேலும், 770 பூங்காக்க ளில் தலா 3 ஆயிரம் லிட்டா் மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்பட்டு, தேங்கி நிற்கும் மழைநீரை சேமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

மழைநீா் தேங்கவில்லை

இந்த நடவடிக்கையின் காரணமாக, சனிக்கிழமை (ஆக. 30) நள்ளிரவு பெய்த பலத்த மழையிலும்கூட, 8 பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களிலும் தண்ணீா் தேங்கவில்லை. இதேபோல, 770 பூங்காக் களிலும் மழைநீா்த் தேங்காமல், மழைநீா் சேமிப்பு கட்டமைப்பு மூலம் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ரூ.30 கோடியில் 3,000 மழைநீா் சேகரிப்புகள்

இதுதவிர, கொசஸ் தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் 1,000 பொது இடங்களிலும், கோவளம் வடிநிலப் பகுதியில் முகுறு ஜொ்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ.20 கோடியில் 2,000 பொது இடங்களிலும் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தலா 3,000 லிட்டா் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *