தாய்லாந்து, செப்.2- தாய்லாந்தில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற் பட்ட தீவிபத்தில், அந்தக் கடை முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 மில்லியன் பாட் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ₹2.4 கோடி) மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப் படுகிறது.
தீச்சம்பவம் நடந்தபோது அந்தக் கடையில் சில தையல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. விசார ணையில், கடையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் தீ முதலில் மூண்டதாகவும், பின்னர் முதல் மாடிக்கு பரவியதாகவும் தெரிய வந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கடையின் இருந்த தையல் இயந்திரங்கள், மின்சாதனங்கள், துணி மணிகள் என அனைத்தும் தீயில் கருகின.
கடையின் உரிமை யாளர் இதுகுறித்து கூறு கையில், ஊழியர் ஒருவர் சலவைப் பெட்டியைப் பயன்படுத்திவிட்டு அதை அணைக்க மறந் திருக்கலாம் எனச் சந் தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு அதிகாரிகள் அருகிலிருந்த குடியிருப்பு களில் உள்ளவர்களை வெளி யேறுமாறு அறிவுறுத்தினர்.