வடசேரி மீரா ஜெகதீசன் மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை

1 Min Read

வடசேரி, செப்.2- வடசேரி மீரா ஜெகதீசன் அவர்கள் 1.9.2025  அன்று மறைவுற்றார். இன்று (02.09.2025) காலை தலைமைக் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மீரா ஜெகதீசன் அம்மையார் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி, மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினார்.

அவரது குடும்பத்தார் துரைசாமி, சுமதி, லதா, இலக்கியா, பவித்ரா, நாகம்மை, திவ்யா, மோகனா, காவியா, நாக சரவணன், அழகுநாகப்பன், வீரமணி  ராதிகா  அனைவருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊமை.ஜெயராமன் (கழக ஒருங்கிணைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்), சி.தமிழ்ச் செல்வன் (திருப்பத்தூர் மாவட்ட துணைத் தலைவர்), பெ.கலைவாணன் (திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்),
சி.ஏ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), பெ.ரா. கனகராஜ் (கந்தில் ஒன்றிய தலைவர்), மு.வெற்றி (மாதனூர் ஒன்றியத் தலைவர்), இரவி (ஆம்பூர் நகரத் தலைவர்), பன்னீர்செல்வம் (ஆம்பூர் நகர அமைப்பாளர்), இளங்கோ (ஆம்பூர் நகர காப்பாளர்), மோகன் (தொழிலாளரணி அமைப்பாளர்), க.முருகன் (தொழிலாளரணிச் செயலாளர்), அன்புச்சேரன் (நகரத் தலைவர் வாணியம்பாடி), காசிநாதன் (நகர செயலாளர்), கலைமணி பழனியப்பன் (வேலூர் மாவட்ட மகளிரணி), ஓவியா, கியூபா, வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர், வேலூர்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர்,  ப.க.), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), சி.லதா (பொதுக்குழு உறுப்பினர்), ச.ஈஸ்வரி (மகளிரணி), கு.இளங்கோவன் (மேனாள் வேலூர் மாவட்ட செயலாளர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்), பெ.இந்திராகாந்தி (மாவட்ட மகளிரணி செயலாளர்), இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.ஜெ. ஓவியா (மாணவர் கழகம்)  உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *