சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

சேலம், செப்.2- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.8.2025 அன்று காலை 12:00 மணிக்கு மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ ‘மகிழ் இல்லத்தில்’ அம்மாப்பேட்டையில் அவரது தலைமையில் நடை பெற்றது.

மாவட்டச் செயலாளர் சி.பூபதி அனைவரையும் வரவேற்றார். அரங்க இளவரசன் மாநகரத் தலைவர், ச.வெ.இராவணபூபதி மாநகரச் செயலாளர், மோ. தங்கராஜ் மாவட்ட துணைச் செயலாளர் ப.க., வழக்குரைஞர் கோ.கல்பனா ப.க. மாநகரச்செயலாளர், துரை சக்திவேல் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முன்னிலை வகித்தனர்.

மாநில மகளிரணி துணைச் செயலாளர் ப.காயத்ரி சிறப்புரை ஆற்றினார். அவர் செங்கல்பட்டு முதல் மாநாடு தொடங்கி இன்று நடக்கவுள்ள நூற்றாண்டு நிறைவு மாநாடு வரையிலான சுயமரியாதை இயக்க வரலாற்றில் பெண்ணியம் பெண் சமத்துவம் பெண்களுக்கு சொத்தில் பங்கு உரிமை பற்றிய செய்திகளை கூறி இன்று ஏன் மாநாடு அங்கு நடத்துகிறோம் என்பதையும் விளக்கிப் பேசினார். அறிவாசான் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை எப்படி சிறப்பாக கொண்டாடுவதென்பதையும் விவரித்துப் பேசினார்.

தோழர்கள் தத்தம் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

செங்கல்பட்டு மறைமலை நகரில் வரும் 04-10-2025 அன்று நடக்கவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்கு சொந்த வாகனங்களிளும் மாவட் டத்தில் ஏற்பாடு செய்யப்படும் வாகனத்திலும் குடும்பங்களுடன் கலந்துகொள்வது என தீர்மானிக்கப் படுகிறது

செங்கல்பட்டு மாநாட்டிற்கு குறைந்தது 10 இடங்களில் சுவரெழுத்து விளம்பரங்கள் எழுதுவது.

மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள ‘பெரியார் மேம்பால’ த்தில் ‘ பெரியார் மேம்பாலம் ‘ பெயர்ப் பலகை மீண்டும் வைக்க பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை மனு கொடுப்பது.

நிகழ்ச்சியில் பேங்க் ராஜூ, போலீஸ் ராஜு, ஆர்.சம்பத், எஸ்.சம்பத், வழக்குரைஞர் செல்வகுமார், பாண்டியன், பா.காவியா, வாசந்தி, எஸ்.சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட தலைவர் வீரமணி ராஜூவிடம் வழக்குரைஞர் செல்வகுமார் ‘விடுதலை‘ ஒரு ஆண்டு சந்தா ரூபாய் 2000/- வழங்கினார்.

புதிய கழக உறுப்பினராக எஸ்.பாண்டியனும், பா.காவியா மகளிர் பாசறையிலும் தங்களை, சேலம் மாவட்ட தலைவர் வீரமணிராஜூ முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்

இறுதியில் அயோத்தியாப் பட்டிணம் ஒன்றியக் கழகச் செயலாளர் அ.ராஜா நன்றி தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *