தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருந்தபடி காவிரிப்பூம்பட்டினம் என்ற சிறப்புக்குரிய பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை கடலில் இருக்கும் வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வுகள் ஒன்றிய அரசின் அனுமதியுடன் இம் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷாவின் பொறுப்பு!
மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இட ஒதுக்கீடு விவகாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே, இந்த போராட்டத் துக்கு அத்துறையின் அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனா உத்தவ் பிரிவு மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.