ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

1 Min Read

அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பால் கடும் பாதிப்புக்குள்ளான திருப்பூர் உள்ளிட்ட
தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட

திருப்பூர், செப்.2 அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பால் கடும்ப பாதிப்புக்குள்ளான  திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டு கொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக திருப்பூரில் இன்று (2.9.2025) காலை திருப்பூர் ரயில் நிலையம் அருகில்,  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு

இவ் வார்ப்பாட்டத்தில், தி.மு.க.துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கே.வி. தங்கபாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன்,
சு. வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லா, கொங்கு தேசிய மக்கள் கட்சியின் தலைவர்  ஆர்.ஈஸ்வரன்,  தமிமுன் அன்சாரி,  கோவை கு.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர் கண்ணன், மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் தங்கவேல், ஆதி தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, திருப்பூர் மத்திய, மாவட்ட தி.மு. கழகச் செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு. கழகப் பொறுப்பாளரும் திருப்பூர் மாநகராட்சி மேயருமான ந.தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு. கழகச் செயலாளரும் திருப்பூர் 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோர் இவ் வார்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பின்னலாடை  ஏற்றுமதியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *