சென்னை, செப். 1- வாக்குறுதி அளித்த பிறகும், அதை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். என்பது உண்மை. அவரிடம் நம்பிக்கை வைத்து காத்திருந்தோம், ஆனால் மாநிலங்களவை சீட் தருவதாக சொல்லி, இறுதியில் முதுகில் குத்திவிட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் கூட்டணி ஒப்பந்தங்களில் தேதியை குறிப்பிட்டு கையெழுத்திடும் நடைமுறை எதுவும் இருக்கவில்லை; அதேபோல தேமுதிக உடனான கூட்டணி ஒப்பந்தத்திலும் தேதியில்லாமல் கையெழுத்திட்டார். இதுவே நாம் ஏமாந்ததற்குக் காரணமாகியது. தற்போது, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டங்களுக்கு பணம் கொடுத்து மட்டுமே மக்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்று பிரரேமலதா விமர்சனம் செய்துள்ளார்.
ஓபிஎஸ் மாநாடு திடீர் ஒத்திவைப்பு
சென்னை, செப்.1- ‘14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஓய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க வரும் 4ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியின் மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.