சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன் இல்ல மண விழா

1 Min Read

செஞ்சி, செப். 1- சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன்- சவுந்தரி நடராசன் பேத்தி யும், செஞ்சி ந. கதிரவன்- வெண்ணிலா மகளுமான க. ஆற்றலரசி – செஞ்சி வே. பாலகணபதி- சிறீசத்யா மகன் பா. அறிவுக்கரசு ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா செஞ்சி தமிழ் திருமகள் திருமண மண்டபத்தில் 29.8.2025 அன்று காலை  நடைபெற்றது.

விருத்தாசலம் நகரத் தலைவர் ந. பசுபதி, வரவேற்றார். கழக பேச் சாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலை மையேற்று உறுதிமொழி கூறியதைத் தொடர்ந்து மணமக்கள்  உறுதி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை. திருநாவுக்கரசு,  விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் சே.வ.கோபன்னா, ஜன சக்தி பத்திரிகை அலுவலக மேலாளர் இளசை கணேசன், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சுடரொளி நசுந்தரம், விழுப்புரம் நகர கழக தலைவர் கொ.பூங்கான்,  செஞ்சி நகர கழக செயலா ளர் நந்தகுமார், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி சதீஷ், திருவண்ணாமலை மாவட்ட  இளைஞரணி தோழர்கள்  சங்கர், திருமலை, அறிவரசன், மலையரசன்குப்பம் சுப்பிரமணி, செஞ்சி பகுத் தறிவாளர் கழகத் தோழர் வே.ரகுநாதன்,  செஞ்சி சு.தென்னரசு, பெரியார் சாக்ரட்டீசு, பனப்பாக்கம் பெருமாள் மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பேராசிரியர் முனைவர்
கு.திருப்பதி நன்றி கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *