கரூர், செப். 1- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காந்திகிராமம் ராஜா இல்லத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் காளிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு,கட்டளை உ. வைரவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் கலந்து கொண்டு கழக ஆக்கப் பணிகள், பெரியார் உலகம் நிதி, விடுதலை சந்தா சேர்த்தல் புதுப்பித்தல், தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு ஆகியவை பற்றி விரிவாக எடுத்துக் கூறினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
உலகம் பெரியார்மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் 10 லட்சம் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ம. ஜெகநாதன், மாவட்டத் துணை செயலாளர் அலெக்ஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், இளைஞர் அணிச் செயலாளர் பெரியார்செல்வம், கடவூர்ஒன்றிய செயலாளர் கார்த்திக், மாணவர் கழகத் தலைவர் கவின், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் புலியூர் வீரமணி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொம்மன், கரூர் நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அமைப்பாளர் விடுதலை, கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி, தாந்தோணி ஒன்றிய அமைப்பாளர் வெங்ககல்பட்டி கா கணேசன், மாவட்டத் தொழிலாளர் அணி செயலாளர் வடிவேல், மகளிர் அணி லட்சுமி, வேலாயுதம்பாளையம் ச.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நன்றி உரை கரூர் நகர செயலாளர் ராஜா கூறினார்.
