செங்கல்பட்டு – மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
தூத்துக்குடி
தூத்துக்குடி, சிதம்பர நகர், வி.வி.டி. சிக்னல் அருகில் 28.8.2025 அன்று மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்கத் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.முருகன் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை வகித்தோர் சார்பாக பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் மா.பால்ராசேந்திரம், தி.மு.க. இலக்கிய அணி மாவட்டப் பொறுப்பாளர் மோ.அன்பழகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.
இறுதியாக மாநிலச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், ‘‘தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததின் நோக்கம், முதல் சுயமரியாதை மாநாட்டின் முடிவுகள் – அவை பின்னாளில் காமராசர் அவர்களால், அறிஞர் அண்ணாவால், முத்தமிழறிஞர் கலைஞரால் சட்டமாகிப் பயன்பாட்டிற்கு வந்ததையும், தொடர்ந்து இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் பெரியாரின் சிந்தனைகள் சட்டமாகி மக்கள் பெரும் பயனடைந்து வருவதையும்” விளக்கிக் கூறினார்.
தந்தை பெரியார் அவர்களால் அடக்கி வைக்கப்பட்ட ஜாதி உணர்வு இன்று மத வெறியர்களால் ஆணவக் கொலை என்ற சூழலுக்குக் கொண்டு செல்லப்படுகிற நிலைக்கு இறுதி முடிவு காணத் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மாநாட்டிற்கு வருகை தந்து முடிவுரையாற்றவிருக்கிறார்.
ஜாதிக் கொடுமைக்கும் அவ்வுரை முடிவுரையாக அமைந்திட விரும்புவோம். தோழர்களும் குடும்பமாய்க் கலந்து மாநாட்டிற்கு எழுச்சியேற்படுத்திட வாரீரென அழைப்பதற்காகவே இக்கூட்டம் என உரையாற்றி நிறைவு செய்தார். மாவட்டத் துணைச் செயலாளர் செ.செல்லத்துரை நன்றி கூறினார்.
இந்நிகழ்வுக்கு மாவட்டக் காப்பாளர் சு.காசி, வழக்குரைஞரணி மாவட்டச் செயலாளர் இ.ஞா.திரவியம், அமைப்பாளர் ந.செல்வம், ப.க. மாவட்டத் துணைத் தலைவர் த.செல்வராஜ், மாநகர கழகத் தலைவர் த.பெரியார்தாசன், கி.கோபால்சாமி, பெ.போஸ், பார்த்தசாரதி, அ.பிரசாத், விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் மு.பாலமுருகன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர்.
நிலக்கோட்டை
திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் வருகின்ற அக்டோபர் 04ம் தேதி நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, நான்கு ரோடு சந்திப்பில், 24.08.2025 மாலை 05.00 மணியளவில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
கருங்கல் – கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட கழகம் மற்றும் கிள்ளியூர் ஒன்றிய கழகம் சார்பாக கருங்கலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – திராவிடர் கழக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச்செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் நோக்கவுரை யாற்றினார். பெரியார் பிஞ்சு அபர்ணா கடவுள் மறுப்புக் கூறினார், பெரியார் பெருந்தொண்டர் சி.கிருஷ்ணேஸ்வரி வரவேற்புரையாற்றினார். கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் கலைச் செல்வன், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, பெரியார் பெருந் தொண்டர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் விரிவாக சிறப்புரை யாற்றினார். திமுக கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.இராஜன், திமுக பேரூர் ஏ.அருள்ராஜ்,அவைத்தலைவர் பி.எஸ்.தாமஸ், திமுக பிரதிநிதி லலித குமார் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் வில்லுக்குறி செல்லையா, எம்.பெரியார் தாஸ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்ற னர். கருங்கல் பேரூர் கழக செயலாளர் கருங்கல் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
கடலூர்
கடலூர் பழைய நகர் மணி கூண்டு அம்பேத்கர் சிலை அருகில் 23.8.2025 அன்று மாலை 6.30 மணிக்கு மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது
ஒன்றிய தலைவர் இரா.தருமன் அனைவரையும் வரவேற்றார். கழக காப்பாளர் அரங்க. பன்னீர் செல்வம், மாநகரத் தலைவர் தென். சிவகுமார், மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, மாவட்டத் துணைத் தலைவர் சி.மணிவேல், கழகப் பேச்சாளர் புலவர் சு.இராவணன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செ.முனியம்மாள், மேனாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் தொடக்க உரையாற்றினார். மாநில துணை செயலாளர் மு.இளமாறன் சிறப்புரையாற்றினார்.
இரா.சுந்தரமூர்த்தி, பெ.தமிழரசன், ரமேஷ், நூலகர் இரா.கண்ணன், பாவேந்தர் விரும்பி, இரு.ராஜேந்திரன், தங்க பாஸ்கர், கனகராசு, தீன.மோகன், ராஜகுமாரன், சுந்தர், க.சேகர், சிவகுமாரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, ராமலிங்கம், விசிக மாநில அமைப்பு செயலாளர் மார்பன், சிவக்குமார், சாக்ர டீஸ், கடலூர் பழைய நகர் பகுதியைச் சார்ந்த காமராஜ், சேஷாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநகர செயலாளர் இரா.சின்னதுரை நன்றி கூறினார்.