கபிஸ்தலம், ஆக. 31- கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிந்தனைக் களம் – 7 மணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் 23.08.2025 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
6.30 மணிக்கு பாபநாசம் நகர கழக துணைச் செய லாளர் வி.மதிவாணன் தலைமையில் சிந்தனைக் களம் – 7 தொடங்கியது. பாபநாசம் நகர துணைத் தலைவர் உ.நாகராஜ் வரவேற்று பேசினார்..
இம்மாதக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவரும், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது பயிற்சி நண்பரும், தஞ்சை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளருமான வே.துரைசாமி (வயது 87) மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் அறிமுகப்படுத்தி பேசினார்.
தொடக்க உரையாற்றிய வருக்கு ஒருங்கிணைப்பாளர் வரதராசன் பயனாடையும், லயன்ஸ் சங்கத் தலைவர் குணசேகரன் நூலினையும் வழங்கினார்கள்.
அடுத்து மேனாள் மாவட்ட கருவூல அலுவலரும், சீரிய சிந்தனையாளருமான சு.அன்பழகனை அவைக்கு அறிமுகப்படுத்தி அவரது கடமையுணர்வு, மனிதநேயம், நேர்மை, வாசிக்கும் பழக்கம் ஆகியவற்றையெல்லாம் எடுத்துக்கூறிய பக பொதுச் செயலாளர் மோகன், சிறப்புரையாளர் அன்பழகன் அவர்களை குறள் – ஓர் ஒப்பீடு என்னும் பொருளில் தனது உரையை வழங்கிட அழைத்தார்கள்..
ஒவ்வொரு இலக்கியத் தையும் எடுத்துக்கொண்டு அது குறளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதையும், குறளின் சிறப்பு என்ன என்பதையும் அது எப்படி மனிதர்களுக்கு நல்வழி காட்டுகிறது என்பதையும் பேசினார்.
அவருக்கு எஸ்பிஅய் ஆறுமுகம் பயனாடையும், செவ்வேல் சாமிநாதன் நூலினையும் வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து அவரது உரைக்கு ஓய்வு பெற்ற ஸ்டேட் வங்கி ஊழியர் ஆறுமுகம் சிறப் பானதொரு பின்னூட்டம் வழங்கினார். அவருக்கு ஒன்றிய பக தலைவர் மு.சேகர் சிறப்பு செய்தார்கள்.
சிந்தனைக்களம் கூட்டத்திற்கு தொடர் வருகை புரிபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நூல் வழங்கும் முறையில் இந்த கூட்டத்தில் வழுத் தூர் ,கோபாலபுரம் அம்ஜத் வர்ஷன், ராஜ்குமார் இரு வருக்கும் மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் சந்திரா சேகரும், ஒன் றிய கழக பொறுப்பாளர் ஜனார்த்தனனும் நூலினை வழங்கி சிறப்பித்தார்கள்.
இறுதியில் குடந்தை மாவட்ட கழக துணைச் செயலாளர் து.சரவணன் நன்றி கூறிட கூட்டம் முடி வுற்றது.
இக்கூட்டத்தை சே.ஆனந்தக்குமார், கோவி.பெரியார் கண்ணன், சா.வரதராசன், மு.சேகர் ஆகியோர் ஒருங்கிணைக்க,. இணைப்புரையை கோவி.பெரியார் கண்ணனும், க.திருஞானசம்மந்தமும் வழங்கினர்.