கன்னியாகுமரி, ஆக. 31- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திரா மணி இணையர்களின் மகன் ம.தமிழ்மதி-மணமகள் ப.பூபதி ஆகியோரின் இணையேற்புவிழா 27.8.2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
கழக மாவட்டத் தலை வர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில், கழக காப்பாளர் ம.தயாளன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் உரைநிகழ்த்தினார்.
நிறைவாக கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்பாக உரை நிகழ்த் தினார். தலைமைக் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினார். வழக்குரைஞர் அப்பாஜி வரவேற்புரையாற்றினார். ஞா.பிரான்சிஸ், அகஸ்தீஸ் வரம் ஒன்றிய கழக தலைவர் எஸ்.குமார தாசு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமார், மகளிரணி செயலாளர் த.சிறீவள்ளி தயாளன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், குமரி நகர கழக செயலாளர் க.யுவான்சு மற்றும் மணமக்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் முனைவோர் போன்றோர் இந்த சுயமரியாதைத் திருமண விழாவில் பங்கேற்றனர். வந்திருந்த அனைவருக்கும் மணமகனின் பெற்றோர் கள் மா.மணி- சு.இந்திரா மணி நன்றி கூறினார்கள்.