புதுச்சேரி, ஆக. 31- புதுவை மாநிலத்தில் தமிழின் நிலையும், EWS ஒதுக்கீடும், கருத்தரங்கம் புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் 24.8.2025 அன்று மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் நடைப்பெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் தி.இராசா அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் சிவ.வீரமணி முன்னிலை வகித்து கருத்தரங்கத்தின் தேவை பற்றியும் தமிழ், தமிழினம் உரிமைகள் மறுக்கப்பட்ட புதுச்சேரி மக்களின் அவல நிலை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனத் தலைவர் இரா.மங்கையர் செல்வன் ‘EWS ஒதுக்கீடும், புதுச்சேரி மாநிலமும்’ என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத் தலைவர் சு.பாவாணன் ‘தமிழின் நிலையும் புதுச்சேரி மாநிலமும்’ என்ற தலைப்பில் உரை யாற்றினார். இறுதியில் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.
வழக்கம் போல ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் அல்லது கருத்தரங்கம் நடந்ததும் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தனது 74 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு கருத்தரங்கம் நடத்திட ஒத்துழைப்பு நல்கினார்.
நிகழ்ச்சியில் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுநல அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் சிவ.வீரமணிக்கு சால்வை மற்றும் புத்தங்களை வழங்கிச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணை செயலா ளர் வி.இளவரசி சங் கர், பொதுக்குழு உறுப் பினர்கள் கி.அறிவழகன், லோ.பழனி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக நகராட்சி, கொம்யூன் பொறுப்பாளர்கள் சா. கிருஷ்ணசாமி, மு.ஆறு முகம், களஞ்சியம் வெங்கடேசன், கா.நா.முத்துவேல், இரா. ஆதிநாராயணன், மகளிரணித் தோழியர் ஜெ.வாசுகி, இளைஞரணித் தலைவர் ச.சித்தார்த், பெ.ஆதிநாராயணன், திருக்குறள் சண்முகம், திருச்சி இரா.திருநாவுக்கரசு, பாவலர். சண்முக சுந்தரம், செ.சுரேஷ், இரா.சாம்பசிவம், மலையா ளத்தான், தெ.வா.சிகாமணி, இள.கோவலன், சிவக்குமார், திராவிட மகிழன், பாவலர்.கோ. கலியபெருமாள்,மனித். கோவிந்தராஜ், பாவலர் வி.பி.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.