தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்

9 Min Read

செங்கல்பட்டு – மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகம்

மன்னங்காடு – மதுக்கூர்

24.08.2025 அன்று பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி மா.காரியப்பன் அவர்களின் நினைவு கல்வெட்டு கொடிக்கம்பத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலரும், மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற மேனாள் தலைவருமான என்.கே..ஆர்.நாராயணன் திராவிடர் கழகத்தின் இலட்சிய கொடியினை உயர்த்தி வைத்தார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மேனாள் மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரு மான வழக்குரைஞர் கா. அண்ணாதுரை தலைமையில், மாவட்ட கழக காப்பாளர் அரு. நல்லதம்பி சுயமரியாதைச் சுடரொளி காரியப்பன் படத்தினை திறந்து வைத்து தொடர்ந்து நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

மாவட்ட கழகத் தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ.இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா. காமராஜ் ஆகியோர் முன்னிலையில் சீரிய பகுத்தறிவாளர் கோ.பழனிவேல்  வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை மதுக்கூர் பகுதிக்கு முதன் முதலில் மன்னங்காட்டில் தான் பகுத்தறிவாளர் கழகம் அன்னை மணியம்மையார் அவர்களை கொண்டு தொடங்கப்பட்டது அன்று தொடங்கப் பட்ட பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பின ராக இணைந்த நான் இன்று வரை சுயமரியாதைக்காரனாகவே வாழ்ந்து வருகிறேன் என்றும், எங்களுக்கெல்லாம் அடித்தளமிட்டவர் அண்ணன் காரியப்பன் அவர்களே என்றும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் 1985 ஆம் ஆண்டு பெரியார் சமூக காப்பணி தொடங்கப்பட்டபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று சமூக காப்பணி மரியாதையுடன் மா. காரியப்பன் அவர்களின் வாழ்க்கை ஒப்பந்த விழா இதே மன்னங்காட்டில் நடைபெற்றது சுயமரியாதை இயக்க ஆரம்ப காலகட்டம், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி இரண்டையும் இணைத்து திராவிடர் கழகமாக 1944 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் பெற்ற மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றியும், 11 வயதில் ஒரு திருமணத்தையே தலைமை ஏற்று நடத்திய பெருமையும் தமிழர் தலைவர் ஆசிரியரையே சாரும். உலகத்தின் ஏழாவது அதிசயம் தமிழர் தலைவர் என்பதற்கான காரண காரியங்களை விளக்கி உரையாற்றி செங்கல்பட்டு மறைமலைநகரில் அக்டோபர் 4ஆம் நாள் நடைபெறும் மாநில கழக மாநாட்டிற்கு வருகை தருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்து 90 நிமிடம் உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

கூட்டத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன், வழக்குரைஞரணி பிரிவு மாவட்ட பொறுப்பாளர் அ.அண்ணாதுரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மாணிக்க சந்திரன், மதுக்கூர் ஒன்றிய கழகத் தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி சி. ரெங்க சாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக தலைவர் சி.செகநாதன், சேது ஒன்றிய கழக செயலாளர் ஆ .சண்முகவேல், ஒன்றிய கழக துணைத் தலைவர் சிரமேல்குடி நா.வை.இராதாகிருட்டினன், மண்டல கோட்டை சரவணன்,  காசாங்காடு பகுத்தறிவன் துரைராஜ் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கெடுத்து கூட்டத்தை செவிமடுத்தனர். கழக மாவட்ட துணைத் தலைவர் காசாங்காடு முத்து துரைராஜ் நன்றி கூறினார். கூட்டத்தை ஒட்டி மன்னங்காடு முழுவதும் திராவிடர் கழக கொடிகளை கட்டி நிகழ்ச்சியை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.சிவஞானம் ஒருங்கிணைப்பு செய்தார்.

சுயமரியாதைச் சுடரொளி காரியப்பன் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை அவரது துணைவியார் கலைமணி, மகன் கார்முகிலன், மகள் கார் பின்னி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சங்கரன்கோவில்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக் கூட்டம் 25-08-2025 மாலை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, மாநில ப.க. துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் முன்னிலையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கை.சண்முகம் வரவேற்றுசிறப்பித்தார்.இராபாளையம் மாவட்டத்தலைவர் சிவக்குமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வு, கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்பாக உரையாற்றினார்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் சிறப்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் இரா.புகழேந்தி முன்னிலை வகித்தார்.

கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் நன்றி கூறினார். ஒன்றிய கழக தலைவர் இல.அன்பழகன், மாவட்டப.க.தலைவர் சு.இராசாங்கம், மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல், உரந்தை செ.பொழிலன் திமுக, காங்கிரஸ், விசிக, சமூகநீதி பேரவை, மே-17 உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

கொடிவேரி – கோபி

24.08.2025 அன்று கோபி கழக மாவட் டத்தின் சார்பில் கொடிவேரி-நால்ரோடு, டி.ஜி புதூரில் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

நான்கு திசைகளிலும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் மந்திரமா! தந்திரமா! நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு செங்கல்பட்டு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 23.8.2025 அன்று மாலை 7.00 மணிக்கு எடப்பாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கா.நா.பாலு – மாவட்ட தலைவர் தலைமையேற்க, சா.ரவி- வரவேற்புரை ஆற்றிட,  கோவி.அன்புமதி மாவட்ட தலைவர் ப.க; சி.மதியழகன் மாவட்ட செயலாளர் ப.க – முன்னிலை வகித்தனர்.

கவிஞர் சி.சுப்பிரமணியன் கழக காப்பாளர்; அ.ச.இளவழகன் மேனாள் சேலம் மாவட்ட தலைவர் – தொடக்க உரையாற்றினர். தொடர்ந்து  கழக பேச்சா ளர் அண்ணா சரவணன் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் நகர செயலாளர் சி.மெய்ஞான அருள் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் ஆர்.எம்.மோகன சுந்தரம் ஒன்றிய தலைவர் எடப்பாடி; இரா.கலையரசன் நகர தலைவர் மேட்டூர்; அரங்க.இளவரசன் மா.தலைவர் சேலம்; ச.வெ.இராவணபூபதி மா.செயலாளர் சேலம்; அ.இ.தமிழர்தலைவர் மா.து.செயலாளர் சேலம்; உல.கென்னடி தலைவர் தாரமங்கலம்; ப.ராமலிங்கம் பெரியார் பெருந்தொண்டர்; கே.என்.குணசேகரன் பொ.செ- அமைப்புசாரா யூனியன்;  போலீஸ். ராஜு சேலம்; மேட்டூர் படிப்பக பொறுப்பாளர்கள் கோ.குமார், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒட்டன்சத்திரம்

பழனி கழக மாவட்டம், ஒட்டன்சத்திரம் திராவிடர் கழகம் சார்பாக, 24.08.2025 அன்று குடிஅரசு   மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – அக்டோபர்-4  செங்கல்பட்டு, மறைமலை நகரில் நடைபெறவுள்ள கழக மாநில மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரம் மாலை 5 மணிக்கு – கார்த்திக் திரையரங்கம் எதிரில் நடைபெற்றது.

பழனி கழக மாவட்ட தலைவர் மா.முருகன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அமரபூண்டி ப.பாலசுப்பிரமணி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  தி.மு.க திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவை தலைவர் கு.தி. மோகன் வாழ்த்துரை வழங்கினார்.

மதிவாணன் (கண்மணிகள் கற்றல் மய்யம்), சு.கருப்புசாமி (பெரியார் உணவர் வாளர்), மதிமுக சட்ட திட்ட தீர்மான குழு உறுப்பினர் பெ. பழனிச்சாமி, முனைவர் மு.மதியழகன், அரிஸ்டாட்டில் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயலாளர் கழகப் பேச்சாளர் பொன்.அருண்குமார் சிறப்புரையாற்றினார்.

தமிழ்புலிகள் கட்சி – மாநில கொள்கை பரப்பு செயலாளர் வழக்குரைஞர் க. சின்னகருப்பன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.காளிமுத்து, ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவை சுப்பிரமணி, தமிழர் சமூக நீதிக் கழகம் சுரா. தங்கப்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கு. தமிழ்ச்செல்வன்,  மே17 இயக்கம் – ராஜமாணிக்கம் , ப.க.மாவட்டத் தலைவர் ச.திராவிடச் செல்வன், சி.இராதாகிருட்டிணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.பாலன்,  வீரக்குமார், குண.அறிவழகன், ச.பாலசுப்பிரமணியன்,  அ.தமிழ்முத்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். கண்மணி கற்றல் மய்ய மாணவர்கள் பாடிய தந்தை பெரியார் குறித்த பாடல்கள் மற்றும் சொற்பொழிவும் பொதுமக்களை மிகவும் ஈர்த்தது. வழக்குரைஞர் பி. ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார்.

சங்கராபுரம்

25.8.2025 அன்று மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க பரப்புரைக் கூட்டம் சங்கராபுரத்தில் பெரியார் அம்பேத்கர் சிலைகள் அமைந்துள்ள வளாகத்தில் சுயமரியாதைச் சுடரொளி ஓவிய இமயம் மு.கலைச் செழியன் நினைவு மேடையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட காப்பாளர் ம. சுப்பராயன் தலைமை வகித்தார். இரிசிவந்தியம் ஒன்றிய திராவிட கழகத் தலைவர் அர.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், சங்கை நகர திராவிடர் கழகத் தலைவர் கலை அன்பரசு, சங்கை நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ. இலட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ. சா .பாஸ்கர் தொடக்க உரையாற்றினார். கழகப் பேச்சாளர்கள் ஆத்தூர் வா. தமிழ் பிரபாகரன், முனைவர் காஞ்சி பா. கதிரவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

வா. தமிழ் பிரபாகரன் தன்னுடைய உரையில் தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவுவையும், பலகாரங்களையும் அனைவரும் விரும்பி உண்டனர். சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும், தன் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதி பட்டத்தை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றினார். அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் தன் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்வதில்லை. ஆனால், வட மாநிலங்களில் உள்ளவர்கள் இன்றும் தன் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்கிறார்கள். இது போன்று பெரியார் எண்ணற்ற புரட்சிகளை செய்து தமிழ்நாட்டு மக்கள் மானமும் அறிவும் திறமையும் உள்ள மக்களாக மாற்றினார் என்பது உள்பட பல கருத்துக்களைக் கூறி சொற்பொழிவு ஆற்றினார். காஞ்சி முனைவர் பா. கதிரவன் தன்னுடைய உரையில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்க ளெல்லாம் படித்தார்கள்; உத்தியோகம் பெற்றார்கள்; மூன்றாவது தலைமுறையாக நம் இன மக்களெல்லாம் படித்ததினால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து சுயமரியாதை யுடன் வாழ்கின்றார்கள்.

பெண்கள் தமிழ்நாட்டில் சொத்து ரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பெற்று, இன்று எல்லாத் துறைகளிலும் சிறப்பாக விளங்கி வருகின்றார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் தந்தை பெரியாரின் உழைப்பும் அவரது சுயமரியாதை இயக்கமுமேயாகும். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி சென்னை மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா ஏற்பாட்டில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் தமிழக முதல்வர் சரித்திர நாயகர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இம்மாபெரும் விழாவிற்கு சங்கராபுரம் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன்னுடைய உரையை நிறைவு செய்தார். இறுதியாக கல்லை நகர திராவிடர் கழகத் தலைவர் இராம. முத்துசாமி நன்றியுரை ஆற்றினார்.

அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சவுந்தரராஜன் & அரி குழுவினரின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்ற கூட்டத்தையொட்டி முன்னிட்டு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் சிலைகள் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது.

மாவட்ட திராவிடர் கழக இலக்கிய அணி தலைவர் பெ.சயராமன், மருத்துவர் வை. நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி தலைவர் அ. கரிகாலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வீர. முருகேசன், கல்லை நகர தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதிவாணன், அரசம்பட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ. ராமசாமி, சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் கே. மதியழகன், சங்கைத் தமிழ்ச் சங்க செயலாளர் சாதிக் பாட்ஷா, கற்க கசடற கலை இலக்கியக் கழக நிறுவனர் தேவ திருவருள், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் கோ சக்திவேல், துணை வட்டாட்சியர் ஓய்வு செ.வ.மகேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் சி. சாமிதுரை, அருணா சாமிதுரை ஆசிரியை, கல்லை நகர திராவிடர் கழகச் செயலாளர் நா. பெரியார், மூங்கில் துறைப்பட்டு நகர திராவிடர் கழகத் தலைவர் நூ.சலீம், மூரார்பாது கிளை கழகத் தலைவர் இரா.செல்வமணி மணலூர்பேட்டை நகர திராவிட கழகத் தலைவர் சி.அய்யனார்; செயலாளர் பா.சக்தி மணலூர்பேட்டை மகளிரணி தோழியர் பா. ரேகா, ஜம்பை கிளைக்கழகதத் தலைவர் வை. சந்திரசேகரன், வடக்கநந்தல் கிளைக் கழக ப.க. தலைவர் கூ.தமிழரசன், மாத்தூர் கிளைக் கழகத் தலைவர் அ.ச. துரைராஜ், அரசம்பட்டு தொ.அழகப் பிள்ளை, சீ.தங்கமணி, ஊராங்கானி மாரி அன்பழகன் இணையர்: ஜெயலட்சுமி ஏழுமலை; செ.கோகுல்: செ.சுப்பிரமணியன், பெரியார் பிஞ்சு பா.பிரபாகரன், மாணவர் கழக சி.அமுதன், வாணாபுரம் ராஜேந்திரன்; பழனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *