வரவேற்கத்தக்க தீர்ப்பு! கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தலாம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

2 Min Read

சென்னை, ஆக.30– மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காகப் பயன் படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று (29.8.2025) நடைபெற்ற நிலையில், கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கோயில் நிதியை கல்விக்கு பயன் படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கோவில் நிலத்தில் கல்லூரிக் கட்டடம் கட்டுவ தற்கான அறிவிப்பாணை வெளி யிடப்பட்டிருந்தது.

கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கல்லூரிக் கட்டடம் அமைப்பதற்கான அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்து சமய அறநியைத் துறை ஆணையரின் அறிவிப்பாணையை ரத்து செய்ய மறுத்தது. இதைத்தொடர்ந்து, கல் லூரி கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சோம்நாத் ஆலயம்

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நீதிபதி விக்ரம் தலைமையிலான நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கைத் தடுப் பதற்கு உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துப் பேசிய ரமேஷ், தற்போது கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள இடமானது கொளத்தூர் சோம்நாத் ஆலயத்தின் இடமாகும்.

கல்லூரிக்காக கோயில் நிதி

மேலும், கோயில் நிதியை கல்லூரிக்காக பயன்படுத்துகின் றனர். எனவே, கல்லூரி கட்டடம் கட்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், சோம்நாத் ஆலயத்தின் இடத்தில் கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்திற்கான வாடகையாக 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை இந்து சமய அறநிலையத் துறையானது கோயிலுக்கு வழங்கி வருகிறது.

சம்மந்தப்பட்ட இடத்தை வாடகை இல்லாமல் இலவசமாக பயன்படுத்தவில்லை. கபாலீஸ்வரர் கோயிலின் சார்பில் தான் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. கல்விக்காகத்தான் இந்த இடத்தை பயன்படுத்து கிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள், மாணவர்களின் எதிர்காலத்துக்காக கல்லூரிக்கான கட்டமைப்பை தான் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்துகிறது.

என்ன தவறு?

கல்விக்காகத்தான் கோயில் நிதியைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, கல்விக்காக கட்டடம் அமைப்பதோ அல்லது நிதியை பயன்படுத்துவதிலோ என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.  மேலும், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்குப் பயன் படுத்துவதில் தவறில்லை என்று கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *