புதுடில்லி, ஆக 29 அமெரிக்கா வின் புதிய 50% சுங்க வரி விதிப்பால், இந்தியாவின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு, சுமார் ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற் படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பொருளாதார இழப்பு: பிரதமர் மோடியின் நண்பரான ட்ரம்ப் ஆட்சி, இந்தியாவுக்கு 50% சுங்க வரி விதித்துள்ளது. இதனால், முதல் பாதிப் பாக 10 துறைகளில் மட்டும் இந்தியா சுமார் ரூ.2.17 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்கும்.
விவசாயிகள் மற்றும் தொழி லாளர்களுக்கு பாதிப்பு: இந்த வரி விதிப்பால், நமது விவசா யிகள், குறிப்பாகப் பருத்தி விவசா யிகள், கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களைக் காக்க எந்த “தனிப்பட்ட விலையையும்” செலுத்தத் தயார் என்று பிரதமர் மோடி முன்பு கூறியிருந்தாலும், இப்போது அவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
வேலை இழப்புகள்: குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அறிக்கையின்படி, இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 1% பாதிப்பு ஏற்படலாம். மேலும், இதன் மூலம் சீனா பயனடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு ஏற்றுமதி சார்ந்த துறைகள், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME), பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.
இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறை யில் சுமார் 5 லட்சம் வேலைகள் (நேரடி மற்றும் மறைமுக) இழப்பு ஏற்படும். ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வேலைகள் ஆபத்தில் உள்ளன. ஏற்ெகனவே, ஏப்ரல் முதல் அமெரிக்காவில் 10% அடிப்படை சுங்க வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சவுராஷ் டிரா பகுதியில் வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதல் தொழிலில் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
சுமார் 5 லட்சம் இறால் விவசாயிகளின் நேரடி வாழ்வாதார மும், மறைமுக மாக மேலும் 25 லட்சம் பேரின் வாழ்வா தாரமும் பெரும் ஆபத்தில் உள்ளது.
வெளியுறவுக் கொள்கை விமர்சனம்: இந்திய தேசிய நலனே மிக உயர்ந்தது. ஒரு வலிமையான வெளியுறவுக் கொள்கைக்கு உள்ளடக்கம் மற்றும் திறமை தேவை. ஆனால், பிரதமரின் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கை ஈடுபாடுகள், அதாவது “புன்னகைகள், கட்டிப்பிடிப்புகள் மற்றும் சுய ஒளி புகைப்படம் (செல்ஃபிகள்)” நமது நலன்களைப் பாதித்துள்ளன. ஒரு வர்த்தக ஒப்பந் தத்தைப் பெறுவதிலும், இப்போது நாட்டைப் பாதுகாப்பதிலும் பிரதமர் தோல்வியடைந்து விட் டார் என்றும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.