தன் ஒளிப்படம் எடுப்பதில் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில்! ஆய்வில் தகவல்

1 Min Read

வாசிங்டன், ஆக. 29- அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ‘தி பார்பர்’ சட்ட நிறுவனம், கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை தன் ஒளிப்படம் (செல்பி) எடுக்கும்போது ஏற்பட்டுள்ள உயிரிழப் புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு, செல்பி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.

அதில் அதிக மக்கள் தொகை, ரயில் தண்டவாளங்கள், பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு செல்வது, சமூக ஊடக கலாசாரம் உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ச்சி யாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்யபட்டது. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1 சதவீதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படு கிறது.

இதன்படி உலகில் செல்பி எடுப்பதற்கு ஆபத் தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின்படி செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் மற்றும் அந்நாடுகளில் நிகழ்ந்த செல்பி தொடர்பான உயிரிழப்புகளின் பட்டியல் பின்வருமாறு:-

1) இந்தியா – 271 நிகழ்வு கள் (214 உயிரிழப்புகள், 57 காயங்கள்)

2) அமெரிக்கா – 45 நிகழ்வுகள் (37 உயிரிழப்பு கள், 8 காயங்கள்)

3) ரஷ்யா – 19 (18 உயிரிழப்புகள் மற்றும் ஒரு காயம்)

4) பாகிஸ்தான் – 16 இறப்புகளுடன் நான் காவது இடத்தில் உள்ளது, எந்த காயமும் இல்லை,

5) ஆஸ்திரேலியா -13 செல்பி இறப்புகளுடன் முதல் 5 இடங்களைப் பிடித்தது.

6) இந்தோனேசியா (14 உயிரிழப்புகள்)

7) கென்யா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் (தலா 13 உயிரிழப்புகள்)

செல்பி தொடர்பான அனைத்து இறப்புகளிலும் பெரும்பாலும் 46 சதவீதம் கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டமைப்புகளில் இருந்து விழுவதே காரணமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *