‘உலகப்பந்தை’க் கவரும் காலை சிற்றுண்டித் திட்டம்!

2 Min Read

தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது பள்ளிக் குழந்தைகளுக்கான சிறந்த ஊட்டச்சத்து மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1.அறிமுகம்:

இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2022ஆம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளில் தொடங்கினார்.

முதலில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு, தற்போது திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

  1. யாருக்கெல்லாம் பயன்?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு.

சமீபத்தில், திட்டம் மேல்நிலை வகுப்புகளுக்கும் விரிவாக்கப் படுகின்றது.

  1. திட்டத்தின் நோக்கம்:

பசி இல்லாமல் பள்ளிக்குச் செல்லுதல்.

பள்ளி வருகை அதிகரித்தல் மற்றும் குழந்தைகளின் படிப்புத் திறன் உயர்த்தல்.

முட்டை, வாழைப்பழம் இவற்றோடு ஊட்டச்சத்து குறைபாடு தவிர்த்து, ஆரோக்கியமான வளர்ச்சி உறுதி.

  1. உணவுப் பட்டியல் (நாள் வாரியாக):

திங்கட்கிழமை – உப்புமா + வெல்லம்.

செவ்வாய்க்கிழமை – கிச்சடி

புதன்கிழமை – பொங்கல்

வியாழக்கிழமை – உப்புமா + காய்கறி

வெள்ளிக்கிழமை – அவல், காய்கறி சேர்த்து

(குழந்தைகளுக்கு பிடித்தவாறு  மாற்றங்கள் செய்யப்படுகின்றன)

  1. நன்மைகள்: பள்ளிக்கு வருகை அதிகரிப்பு.

மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்பாடு.

பெற்றோரின் பொருளாதார சுமை குறைவு.

  1. புள்ளி விவரம் (2024 நிலவரப்படி)

நாள்தோறும் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு பெற்றுக் கொள்கின்றனர்.

சுமார் 33,000 பள்ளிகளில் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதற்காக ‘திராவிட மாடல்’ அரசு ஆண்டு ஒன்றுக்குச் செலவழிக்கும் தொகை ரூ.600 கோடி.

தெலங்கானா மாநில அரசு இதனைப் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது. பல மாநிலங்களின் ஆய்விலும் உள்ளது.

கனடா போன்ற வெளிநாடு இத்திட்டத்தை வரவேற்று செயல்படுத்த ஆயத்தமாகி உள்ளது.

நீதிக்கட்சி ஆட்சியில் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்தபோது (1920) சில குறிப்பிட்ட பகுதியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

1960இல் காமராசர் முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டம் விரிவாக்கம் பெற்றது.

பிறகு எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோர் முதல மைச்சராக இருந்தபோது மேலும் மெருகூட்டப்பட்டது.

காலை சிற்றுண்டித் திட்டம் என்பது ‘திராவிட மாடல்’ அரசு நடத்தும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகிற்கே முன் மாதிரியான திட்டமாகப் போற்றப்படுகிறது.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்மான் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை வெகுவாகப் பாராட்டியதோடு மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கு (26.8.2025) வருகை தந்து தமிழ்நாட்டு முதலமைச்சருடனும், மாணவர்களுடனும் அமர்ந்து சிற்றுண்டி அருந்தி சுவைத்தார். இந்த திட்டம் பஞ்சாபிலும் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இவ்வளவிற்கும் ஒன்றிய பிஜேபி அரசு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய ரூ.2151 கோடி நிதியை அளிக்கவில்லை. இத்தகைய நிதி நெருக்கடி நிலையிலும் ‘திராவிட மாடல்’ அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருவது கர ஒலி எழுப்பி ஆரவாரம் செய்து வரவேற்கத்தக்கதும் – பாராட்டத்தக்கதுமாகும்.

2026 தேர்தலிலும் வெற்றி பெற்று மேலும் பல புதிய திட்டங்களால் கிடைக்கும் பலன்களை எதிர்பார்த்து தமிழ்நாட்டு மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *