சென்னை, ஆக. 28- தொழிலாளர்களது உற்றத் தலைவராகத் தொண்டாற்றிய தமிழறிஞர் திரு.வி.க. அவர்களின் 142ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (26.8.2025) காலை 8 மணிக்கு செம்பியம் – திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன், கு.சவுந்தர்ராஜன் (திமுக), கோபிநாத், பாஸ்கர், பாபு மற்றும் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.