இந்தியாவிற்கு அமெரிக்கா 50 விழுக்காடு கூடுதல் வரி மற்றும் அபராதமும் விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையான பாதிப்பிற்கு இலக்காகி உள்ளது.
இந்த நிலையில் நாக்பூரில் டிரம்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி, டிரம்ப் கட் அவுட் ஊர்வலமாகக் கொண்டு சென்று டிரம்ப் ஒழிக என்று கூச்சலிட்டார்கள் (23.8.2025).
இதே கூட்டம் 2020 ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியா வந்தபோது அவரை வரவேற்று, அவர் நீண்ட ஆயுளோடு வாழ, யாகங்கள் நடத்தியது.
அவர் தேர்தலில் வெற்றி பெற நாக்பூரில் ஹிந்து சேனா அமைப்பினர் டிரம்ப் படத்தை வைத்து பூஜை செய்தார்கள்.
குஜராத் மாநிலம் சூரத்தில் டிரம்ப்பிற்குக் கோவில் கட்டி, அவர் பிறந்த நாள் அன்று சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர்.