செங்கல்பட்டு – மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
நரசிங்கபுரம், ஆத்தூர்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் கடந்த 19.8.2025 அன்று மாலை ஆறு மணிக்கு ஆத்தூர் கழக மாவட்டம் நரசிங்கபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர அமைப்பாளர் மருத பழனிவேல் தலைமை வகித்து உரையை துவக்கினார். வரவேற்புரை நகர தலைவர் வே.மணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் அ. சுரேஷ், மாவட்ட செயலாளர் நீ. சேகர், மாவட்ட காப்பாளர் த.வானவில், மாவட்ட செயலாளர் நீ.சேகர், பக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன், பக மாவட்ட தலைவர் வ. முருகானந்தம், ஆத்தூர் நகர தலைவர் வெ. அண்ணா துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரை ஆத்தூர் சந்திரனும், கழக பேச்சாளர் தோழர் மு.இளமாறனும், தந்தை பெரியார் அவர்கள் ஏன் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதும் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன, நூறு ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பதை விளக்கி பல்வேறு செய்திகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள்.
இந் நிகழ்ச்சியில் பெரியார் பெருந் தொண்டர் ஏவி தங்கவேல், பக மாவட்ட செயலாளர் அ. அறிவுசெல்வம், நரசிங்கபுரம், நகர செயலாளர் க. நல்ல சிவம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே நின்று பல்வேறு வரலாற்று அரிய தகவல்களை கேட்டு தெளிந்தனர்.
நிறைவாக க.நல்லசிவம் அனை வருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
தலைவாசல், ஆத்தூர்
23.8.2025 சனிக்கிழமையன்று அன்று மாலை 6 மணியளவில் தலைவாசல் பேருந்து நிலையம் அருகே சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநில மாநாடு நிறைவு விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அ. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீ. சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன், பக மாவட்ட தலைவர் வ. முருகானந்தம், நரசிங்கபுரம் வே. மணி, வேப்பம்பூண்டி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கவுரையை ப.க. மாநில பொதுச்செயலாளர் வா.தமிழ்பிரபாகரன் உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் ஆத்தூர் இரா.விடுதலை சந்திரன் உரையாற்றியபிறகு, கழக பேச்சாளர் சு.பெ.தமிழமுதன் சிறப்புரையாற்றினார். அப்போது பல வரலாற்று நிகழ்வுகளை நினைவு படுத்தி தந்தை பெரியார் அவர்கள், வகுப்புவாரி பிரதிநிதிதுவம் வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய காங்கிரஸ் ஏற்காத சூழலில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் என்பதையும், அதன் விளைவாக தமிழ்நாடு ஏற்படுத்திய தாக்கம் என்ன தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பல கட்ட போராட்டம் நடத்தி அதில் எப்படி வெற்றி பெற்றார் என்பதையும், இன்றைக்கும் அதை நீர்த்து போகாமல் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் அவர்கள் மறைவுக்கு பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது 92 வயதிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் என்ன என்பதையும், திராவிடர் கழகத்தின் நோக்கம் என்ன என்பதையும் விளக்கி சிறப்பாக உரையாற்றினார்கள்.
நிறைவாக மாவட்ட மாணவர் கழக செயலாளர் தோழர். ச.அஜித் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
மொரப்பூர்
அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் அரூர் கழக மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையம் அருகில் 23.8.2025 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் மூ.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக துணை செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன் தலைமை வகித்து உரையாற்றினார். ஒன்றிய தி.மு.க. செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன் எஸ். கே.சி. மெடிக்கல் உரிமையாளர் சி. சம்மதர்மம், கழக செயலாளர் டி. சிவாஜி, கடத்தூர் நகரத் தலைவர் இரா. நெடுமிடல், மாவட்ட திமுக பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் பெ. அன்பழகன், மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் அறிவுமணி, செயலாளர் நாகராஜன், கடத்தூர் ஒன்றிய கழக செயலாளர் பச்சையப்பன், மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மோகன் தாஸ், மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் டி.ராஜேந்திரன், கழக மாவட்ட கலைத்துறை செயலாளர் கீரை பிரபாகரன், தர்மபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரூர் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மாவட்ட கழக செயலாளர் கு.தங்கராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு – மாநில துணைச் செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் சா. இராஜேந்திரன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில கழக இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை ஆகியோர் கருத்துரை ஆற்றினர்,
கழக சொற்பொழிவாளர் பழ. வெங்கடாசலம், கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், உரைக்குப்பின் சுயமரியாதை இயக்க வரலாறு, அதன்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், அதனால் தமிழ்நாடு அடைந்த பயன்களும், திராவிடர் இயக்க அரசியலால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், கல்வி பொருளாதார வளர்ச்சி குறித்து கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கூறுவது போல ரத்த உறவை விட கொள்கை உறவு சிறந்தது என்பதற்கான எடுத்துக்காட்டாக மொரப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு திண்டிவனத்தில் இருந்து மாவட்ட கழக காப்பாளர் நவா. ஏழுமலை தலைமையில் தனி வாகனத்தில் விஜயலட்சுமி, ஜமுனா, மேகலா, சக்கரவர்த்தி, பன்னீர், ஜனார்த்தனன், ரமேஷ், பாவேந்தன், லட்சுமி, வழக்குரைஞர் பெருமாள், உள்ளிட்ட 12 பேர் வருகை தந்தனர். அவர்களுக்கு அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கல்பனா, வேளாங்கண்ணி, ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சாய் குமார், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் தென்றல் பிரியன், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் கண்ணப்பன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், கடத்தூர் ஒன்றிய திமுக துணை செயலாளர் சொ. பாண்டியன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் சு. சூர்யா, வேப்பிலைப்பட்டி தோழர்கள் கணேசன், தி.அமுல்செல்வம், த.தமிழழகன், ரச்சனா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சஞ்சீவன், அரூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் கவிஞர் பிரேம்குமார், தொ.மு.ச. பொறுப்பாளர் மொரப்பூர் மணி, சேட்டு குமார், வேதரம்பட்டி தோழர்கள் போஸ், திருமால், குணசீலன் மற்றும் பரையபட்டி பகுதியில் இருந்து பெண்கள் வருகை தந்து கலந்து கொண்டனர். இறுதியாக திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் வழக்குரைஞர் ஏ.பெருமாள் நன்றி கூறினார்.
சோலையார்பேட்டை
சோலையார்பேட்டையில் (திருப்பத்தூர் மாவட்டம்) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு பரப்புரை கூட்டம், தந்தைபெரியார் சிலை, பேருந்து நிறுத்தம் அருகில் மிக எழுச்சியுடன் 24.08.2025 மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சி தொடங்கியது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையிலும், எஸ். சிவக்குமார் நகரச் செயலாளர் சோலையார்பேட்டை வரவேற்புரையிலும் நடைபெற்றது.
அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்) சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்), சி. ஏ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தங்க அசோகன் (நகர துணைத் தலைவர் சோலை யார்பேட்டை), நரசிம்மன் (நகர காப்பாளர்) கவிஞர் சோலைப்பிரியன் ஜே.எம்.பி.வள்ளுவன் (நகர துணைச் செயலாளர் சோலையார்பேட்டை), ஜே. எம்.பி.பாபுஜி, (நகர அமைப்பாளர்) ஜே. எம். பி. கருணாநிதி (நகர தலைவர் இளைஞரணி சோலையார்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தொடக்கவுரை ஆற்றினார்.
தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) அண்ணா சரவணன் (மாநில ப.கழக துணைப் பொதுச்செயலாளர்), நா. சுப்புலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில் சோலையார் பேட்டையை சார்ந்த ஏ. வரதராசன் அவர்களை 1976 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நீதிபதி ஆவார். தந்தைபெரியார் அவர்கள் உயர் நீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட நீதிபதி இது வரை நியமிக்கப்படவில்லை என்று விடுதலையில் வெளியிட்ட அறிக்கையில் அடிப்படையில் அப்போது முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் பரிந்துரை செய்து நியமிக்கப்படவர் இவர் என்றும்,
மேலும் இந்த மண்ணின் சுயமரியாதைச் சுடரொளிகளான எனது தந்தை கே.கே. சின்னராசு மற்றும் டி.டி.தங்கவேல், மற்றம் ஏ.டி.ஜி. கோபால், நாதமுனி ஆகியோர் தங்தைபெரியார் அவர்களோடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்னறவர்கள் என்று தனது வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அக்டோபர் 4இல் ஆசியர் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று சிறப்பிக்கவிருக்கும் மாநாட்டில் கழக தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாருக்கு தங்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக குடும்பம், குடும்பாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று சிறப்பு பேச்சாளர்கள் உரையாற்றினார்கள்.
முன்னதாக கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் மந்திமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் காளிதாஸ் (நகர தலைவர் திருப்பத்தூர்), எம். என். அன்பழகன் (விடுதலை வா. வட்ட அமைப்பாளர்), வெ.அன்பு (மாவட்ட தலைவர் ப. க.,), இரா. கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிரணி) த.சாந்தி (மாவட்ட துணை தலைவர்) வெ அன்பு (மாவட்டத்தலைவர் ப. க), இரா. நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்) இளம்பரிதி (பரிதி பதிப்பகம்) தியாகராஜன் (பகுத்தறிவாளர் கழகம்) கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப.க.), க.மதியழகன் (நகர செயலாளர் சோலையார் பேட்டை), க.முருகன் (தொழிலாளரணி துணைச் செயலாளர்), சரவணன் (ஒன்றிய தலைவர் இலக்கிணாக்கன்பட்டி), மு.வெற்றி (மாதனூர் ஒன்றிய தலைவர்), சீனி (பகுத்தறிவாளர் கழகம்), பச்சை முத்து ஏலகிரி பொறுப்பாளர்), முருகேசன் (மத்தூர் ஒன்றிய செயலாளர்), க. இனியவன் (மாணவர் கழகம்), க. உதயவன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோ. இராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 24.8.2025 அன்று காலை 10 மணி அளவில் மறைமலை நகரில் உள்ள இளங்குயில் மழலையர் பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்அ. செம்பியன் தலைமையில், மாவட்டச் செயலாளர் ம. நரசிம்மன் வரவேற்புரையுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் வி பன்னீர்செல்வம் விளக்க உரை ஆற்றினார். வரும் அக்டோபர் நான்காம் தேதி செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டை எழுச்சியுடன் வெற்றிகரமாக அனைவரும் சேர்ந்து நடத்துவோம் என சூளுரைத்தார். மாநாட்டுக்கு நன்கொடை பெறுவதற்கு அதிக அளவிலான தோழர்கள் சேர்ந்து செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மறைமலை நகர் செயலாளராக செ.முடியரசன் செங்கல்பட்டு நகர கழக தலைவராக பொன். ராசேந்திரன் அவர்களும் அறிவிக்கப்பட்டனர் இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந்தரம், மாவட்ட பக தலைவர் சே. சகாயராஜ் மாவட்ட பக அமைப்பாளர் அ.சிவகுமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண், மாவட்ட கழக துணைச் செயலாளர் ப. முருகன், மாவட்ட ப.க. துணை செயலாளர் மு. பிச்சைமுத்து, மறைமலைநகர திருவள்ளுவர் மன்ற செயலாளர் மா. சமத்துவமணி, மறைமலைநகர் பக அமைப்பாளர் வி வசந்தன், ஏழுமலை உள்ளிட்ட தோழர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர், நகர கழக தலைவர் ம. வெங்கடேசன் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.