சேலம், ஆக. 27– பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் களைத் தடுக்கவும், அவர்களின் கல்வி, உரிமைகள் மற்றும் பாது காப்புக்காகவும் வீர, தீர செயல்கள் புரியும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
விருதுக்கான தகுதிகள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், தேசிய பெண் குழந்தைகள் நாளான 2026 ஜனவரி 24 அன்று இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட, தமிழ்நாட்டில் வசிக்கும் பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
கீழ்க்கண்ட செயல்களில் சிறப்பாகப் பங்காற்றியவர்கள் தகுதியுடையோர் ஆவர்:
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்.பெண் குழந்தைகள் திருமணத்தைத் தடுத்தல்.சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று கருதப்படும் செயல்களில், பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தல்.
விருதுக்குத் தகுதியுள்ள பெண் குழந்தைகள், http://awards.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், தங்கள் பெயர், தாய், தந்தை பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் ஒளிப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனைகள் குறித்து ஒரு பக்கத்துக்கு மிகாத குறிப்புடன் அதற்கான ஆதாரங்களையும் இணைக்க வேண்டும்.
விருது விவரங்கள்
இந்த விருதுக்கு மாநில அளவில் ஒரு சிறந்த பெண் குழந்தை தேர்ந் தெடுக்கப்படுவார். அவருக்குப் பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட சமூக நல அலுவலகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்-636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.