திருச்சி, ஆக.27- திருச்சி கே.எஸ். வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதா நிறுவனத்தை முதலாம் ஆண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச. இராஜேஷ், இணை இயக்குநர் முனைவர் சி. விஜய லெட்சுமி, பேராசிரியர்கள் ர.தினேஷ், ஆர்.ஷக்தி மற்றும் செல்வி கே.ரெத்தினா ஆகியோர் 23.082025 அன்று பார்வையிட்டனர்.
அந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் கே.எஸ்.சசி வாரியார் தலைமையில் மாணவர்கள் ஆயுர்வேதா நிறுவனத்தை பார்வையிட்டனர். இதில் ஆயுர்வேத முறையில் காய்ச்சல், சளி, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய பல்வேறு மருந்து தயாரிப்பு முறைகளை மாணவர்கள் நேரடியாகப் பார்வை யிட்டனர்.
மேலும் மருந்து உற்பத்தி முறைகள், அதன் தரத்தை உறுதி செய்தல், மற்றும் விற்பனை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மருந்து தயாரிப்புக்கள் குறித்து பாடத்திட்டத்தில் படிப்பதோடு நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டது தங்களது மருந்தியல் ஆய்வுத் திறனை வளர்த்ததாக மாணவர்கள் தெரிவித்ததோடு, இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, கே.எஸ். வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதா நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் கே.எஸ்.சசி வாரியார் மற்றும் மருந்தியல் குழுவினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.