ஜெயங்கொண்டம், ஆக.27- எல்கேஜி முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான ஜெயங்கொண்டம் – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வாரச் சந்தை கல்வி சுற்றுலா களப் பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்களுக்கு நடைமுறை அறிவும், சமூக அனுபவமும் கிடைக்கச் செய்வதற்காக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. வார சந்தையில் மாணவர்கள் பல்வேறு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும் முறைகளை ஆர்வமுடன் கவனித்தனர்.
இவ்வாறு நேரடியாக சந்தையில் பங்கேற்பதன் மூலம் பொருட்களின் விலை விற்பனை முறைகள், பரிமாற்றம் மற்றும் வணிக பழக்க வழக்கங்கள் குறித்த அறிவு மாணவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் பயணத்தில் ஆசிரியர்கள் உடன் இருந்து மாணவர்கள் கேள்விகளை எழுப்பி கல்வி சூழலை புரிந்து கொள்ள வழி செய்தனர்.
பள்ளி முதல்வர் புத்தக அறிவோடு சேர்த்து வாழ்க்கை சூழலையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இப்பயணத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.