கழகத் தலைவரின் ஆணைப்படி மன்னார்குடி சென்டலங்கார ஜீயரின் வன்முறைப் பேச்சை கண்டித்து அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க கோரி 25.08.25 மாலை 6 மணிக்கு மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.அன்பழகன், வழக்குரைஞர் சு.சிங்காரவேலர், மாவட்ட துணை தலைவர் ந.இன்பக் கடல், மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் கா.செல்வராசு, மன்னை நகர தலைவர் எஸ்.என்.உத்திராபதி, மன்னை பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ச.அறிவானந்தம், மன்னை நகர கழக இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.