வர்ஜீனியா, ஆக.26 கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மாமியாரும், கலைச்செல்வி, பன்னீர்செல்வம், தேன்மொழி, முத்தையா ஆகியோரின் தாயாரு மான வடலூர் லீலாவதி நாராயணசாமி (வயது 94) நினைவேந்தல்- படத்திறப்பு நிகழ்ச்சி அமெ ரிக்கா- வர்ஜீனியாவில் 23.8.2025 அன்று பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை நடைபெற்றது.
பெரியார் பன்னாட்டு அமைப்பு டாக்டர் சரோஜா இளங்கோவன் தலைமையில், பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து நகைச்சுவையுடன் கொள்கை விளக்க நினைவுரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அறிமுக உரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்தார். கே. என். பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.
அமெரிக்காவில் வாழும் குடும்பத்தினர் இனியா, பொறியாளர் கவுதமன், பொறியாளர் அறிவுப் பொன்னி, பொறியாளர் கண்மணி, டாக்டர் நவீன், பொறியாளர் எழில் வடிவன், பொறியாளர் சதீஷ்குமார், பொறியாளர் சுகன்யா, வடலூர் கலைச்செல்வி, சேலம் தேன்மொழி, சென்னை வழக்குரைஞர் கோ .குணசேகரன், கழக குடும்பத்தைச் சேர்ந்த பொறியாளர் கனிமொழி, ஆசிரியர் மேரி பொன்முடி ஆகி யோர் நினைவுரை ஆற்றினர். மறைந்த லீலாவதி நாராயணசாமி அவர்களின் பண்பு நலன்களை விளக்குவதாக அவர்களின் உரை அமைந்தது.
தமிழர் தலைவரின் நினைவுரை
காணொலி வழியே….
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி வழியே மறைந்த அம்மையார் லீலாவதி நாராயணசாமி அவர்களது கொள்கைக் குடும்பத்தின் இயக்க ஆதரவுப் பணிகளையும், நாராயணசாமி, ஜெயமோகன் ஆகியோரின் சிறப்பு இயல்புகளையும், கொள்கை ஆர்வத்தையும் விளக்கிப் பேசி அருமையான நினைவுரை ஆற்றினார்.
உருக்கமாகவும், உணர்ச்சிமயமாகவும் தமிழர் தலைவரின் உரை அமைந்திருந்தது. அம்மையாரைப் பற்றிய நிழற்பட காட்சிப் பதிவும் நிகழ்ச்சிக்கு முன்பாக ஒளிபரப்பப்பட்டது. முடிவில் சேலம் எஸ் .வி. மோகன் பாபு நன்றி கூறினார். நிகழ்வில் மோகன்ராஜ், சத்திய நாராயணன், மெல்வின், கார்த்தி,பிரவீனா, அழகர், வின்சி, ப்ரீத்தி, கவுரி, சுபாஷ், பிரவீன், சுஜாதா, கிரானின், சுப்ரியா ஆகியோர் பங்கேற்று ஆறுதல் வழங்கினர். அனைவரும் இரண்டு நிமிடம் வீரவணக்கம் செலுத்தினர்.
தந்தை பெரியார் கொள்கை உலகு மயம் ஆகியுள்ளது என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. எவ்வித சடங்கு சம்பிரதாயம் இல்லாமல் நினைவேந்தல் படத்திறப்பு கொள்கை விளக்க நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.