உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் ெபாது மருத்துவமனையில், தோழர் ஆர்.என்.கே. அவர்கள் சேர்க்கப்பட்டு நல்ல வண்ணம் உடல் நலம் தேறி வருகிறார்.
தோழர் நல்லகண்ணு அவர்கள் உடல் நலம், சிகிச்சைபற்றி தொலைப்பேசி மூலம் சி.பி.அய். மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கேட்டறிந்தார். விரைவில் அவர் முழு நலம் பெற்று, வீடு திரும்பி, தனது லட்சியப் பணிகளை வழமை போல் மேற்கொள்ள வேண்டுமென தமது விழைவினைத் தெரிவித்துக் கொண்டார்.