கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.8.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலாவின் அண்மை தீர்ப்புகள், சங்கடத்தை உருவாக்கி உள்ளன. சில வழக்குகளை அவரிடம் இருந்து வேறு நீதிபதி களுக்கு மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்தரவு.

* இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதிபதி சுதர்சன் ரெட்டியை ‘ நக்சல்’ எனக் கூறுவதா? அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

* ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. 20 ஆழ்துளை கிணறுகள் தோண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அளித்த அனுமதி திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பொதுத் தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி விரைவில் வெளியிடும். இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி களும் ஒற்றுமையாக செயல்படுகின்றன. நாங்கள் அனைவரும் சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைந்திருக்கிறோம் என ராகுல் பேச்சு.

* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டச் சிக்கல் குறித்து ஆராய குழு அமைத்தது தெலங்கானா அரசு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரின் அராரியாவில் நடந்த ‘வாக்காளர் அதிகார பயணத்தின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி மோட்டார் சைக்கிள்களில் பயணம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு மசோதா; நாடாளுமன்ற கூட்டுக் குழுவை புறக்கணித்த திரிணாமுல், சமாஜ்வாதி: எதிர்க்கட்சிகள் முடிவால் ஒன்றிய அரசுக்கு சிக்கல்

தி இந்து:

* வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் பாஜக நமது மக்களின் வாக்குகளை தொடர்ந்து திருடும். எனவே கட்சியின் மாவட்ட தலைவர்களின் மிகப்பெரிய பொறுப்பு, அடுத்த 5 ஆண்டுகள் கவனமாக இருந்து இதை தடுக்க வேண்டும். இந்த வாக்குத் திருட்டுக்கு பிறகு பாஜ இப்போது அதிகாரத் திருட்டில் ஈடுபட்டு உள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தி டெலிகிராப்:

* தேர்தல் ஆணையம் ‘மோடி ஆயோக்’, ‘பாஜக பிரிவு’ தேஜஸ்வி கண்டனம். ‘சட்டவிரோத குடியேறிகள் குறித்த ஒரு வழக்கைக் கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டவில்லை’ என சாடல்.

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *