சென்னை, ஆக.24 தி.மு.க. முப்பெரும் விழாவில் இவ்வாண்டு விருது பெறுவோர் விவரத்தை தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்
2025ஆம் ஆண்டு செப்டம் பர் 17-ஆம் நாள் கரூரில் நடை பெறும் தி.மு.க. முப்பெரும் விழா வினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான
பெரியார் விருது – தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும்,
அண்ணா விருது – தணிக் கைக்குழு மேனாள் உறுப்பினரும் -பாளையங் கோட்டை நகர்மன்ற மேனாள் தலைவருமான சுப.சீத்தாராமன் அவர்களுக்கும்,
கலைஞர் விருது – நூற்றாண்டு கண்டவரும் – அண்ணாநகர் பகுதி மேனாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி மேனாள் உறுப்பின ருமான சோ.மா.ராமச்சந்திரன் அவர்களுக்கும்,
பாவேந்தர் விருது – தி.மு.கழக மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும் – குளித்தலை ஒன்றியக்குழு மேனாள் தலைவருமான குளித்தலை சிவராமன் அவர்களுக்கும்
பேராசிரியர் விருது – தி.மு. கழக ஆதிதிராவிடர் நலக் குழுத் தலைவரும் -காட்டு மன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினரும், சட்டப்பேரவை மேனாள் கொற டாவுமான மருதூர் ராமலிங்கம் அவர்களுக்கும்
மு.க.ஸ்டாலின் விருது – ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மேனாள் செயலாளரும் – மேனாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்களுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.