மேற்கு தாம்பரம், ஆக. 24- மேற்கு தாம்பரம் பெரியார் நகர் சண்முகம் சாலை பாரதி திடலில் 19.8.2025 அன்று மாலை 6 மணியளவில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மலைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமை யுரை ஆற்றினார்.
மாவட்டச் செயலா ளர் கோ.நாத்திகன் அனை வரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். கழக கிராமபுற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தொடக்க உரை நிகழ்த் தினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தொண்டு, தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு திராவிடர் கழகத்தின் வரலாற்றுச் செய்திகளை எடுத்துரைத்தார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தம் உரையில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் பன்னாட்டு தலைவர்கள், சமூகத் தலைவர்களும் வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் 100 மாநாட்டு விளக்கக் கூட்டங்கள் நடக்கிறது. இந்த மாநாடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுச் சிறப்பிக்க இருக்கிற மாநாடு.
மாநாடு என்றால் அந்தந்த கட்சியில் உள்ள வர்கள் மட்டுமே கலந்து கொள்பவர்கள் ஆனால் இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு மட்டுமல்ல தந்தை பெரியார் அவர் களுக்கு மக்கள் நன்றி பாராட்டும் மாநாடு என்று உரையாற்றினார்.
கழக பொதுக்குழ உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் நன்றியு ரையாற்றினார். கூட்டத் திற்கு கட்சிகளுக்கு அப் பாற்பட்டு பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.