திருப்பத்தூர், ஆக. 24- திருப்பத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு பரப்புரைக் கூட்டம் ஏ. டி. ஜி. தேநீர் கடை, புதுப் பேட்டை சாலையில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) தலைமையில், காளிதாஸ் (நகரதலைவர்) வரவேற்புரையாற்றினார்.
அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்), சி.ஏ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), எம்.ஞானபிரகாசம் (விடுதலை வாசகர் வட்ட தலைவர்), வ. புரட்சி (விடுதலை வாசகர் வட்ட செயலாளர்), எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்), வெ.அன்பு (மாவட்ட தலைவர் ப.க.), இரா. கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிரணி), நா.சுப்புலட்சுமி, விஜயா அன்பழகன் (மாவட்ட காப்பாளர் மகளிரணி) ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தொடக்கவுரை ஆற்றினார்.
கழக பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிறப்புரையாளர்கள் உரைகளில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் ஏன் தோற்றுவித்தார் எனவும், முதல் செங்கல்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானங்கள், திராவிட மாடல் அரசுகள் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று சட்டமாக்கியவைகளை குறித்தும் விளக்கமாக உரையாற்றினர்.
அக்டோபர் 4இல் ஆசியர் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று சிறப்பிக்கவிருக்கும் மாநாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாருக்கு தங்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக குடும்பம், குடும்பாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
முன்னதாக கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் நடத்திய மந்திமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங் கேற்றவர்கள் சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்), தங்க அசோகன் (மாவட்ட காப்பாளர்), சி. சுரேஷ்குமார் (மாவட்ட தலைவர் இளை ஞரணி), இரா. கற்பகவள்ளி (மாவட்டத்தலைவர் மகளிரணி), நா. சுப்புலட்சுமி, வெ அன்பு (மாவட்டத் தலைவர் ப. க.), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்), இரா.நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்), கோ.இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்), கோ.திருப்பதி (மாவட்டச்செயலாளர்), சி.சிவக்குமார் (நகர தலைவர் சோலையார்பேட்டை), க. மதியழகன், (நகர செயலாளர்) சோலையார் பேட்டை க. முருகன் (தொழிலாளரணி துணைச் செயலாளர்), சரவணன் (ஒன்றிய தலைவர் இலக்கிணாக்கன்பட்டி), சீனி (பகுத்தறிவாளர் கழகம்), பச்சை முத்து (ஏலகிரி பொறுப்பாளர்), முருகேசன் (மத்தூர் ஒன்றிய செயலாளர்), க.இனியவன் (மாணவர் கழகம்), க.உதயவன் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.
அக்ரிஅரவிந்த் (கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளரணி அமைப்பாளர்) நன்றியுரை ஆற்றினார்.