ஜெயங்கொண்டம், ஆக.24- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது.
பள்ளி வளாகமே பசுமையுடன் காட்சி யளிக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பெற் றோர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு முதல்வர் தலைமை ஏற்று தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நடும்பணியை துவக்கி வைத்தார்.
மழலைச் செல்வங்கள் பச்சை நிற ஆடை உடுத்தி பள்ளி வளாகத்தைப் பசுமை ஆக்கினர்.
மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், மரங்களின் பயன், இயற்கையின் பாதுகாக்கும் கடமை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து மாணவர்களே புரிந்து கொண்டு, விதைகளை சேகரித்து மழலைச் செல்வங்கள் உற்சாகத்துடன் தங்கள் பள்ளி வளாகத்தில் விதைகளைத் தெளித்து தண்ணீர் ஊற்றினர்.
உரமில்லா காய் ,கனிகளை மாணவர்களே உற்பத்தி செய்து பள்ளி மாணவர்கள் விடுதிக்கு வழங்குவது வழக்கம்.
இவ்விழாவின் மூலம் பசுமையான சூழலை பாதுகாக்கும் பொறுப்புணர்வு மாணவர்களிடையே வலுப்பெற்றது.