உலக வரைபடத்தில் உள்ள ஆப்பிரிக்க கண்டத்தை ஏற்காத ஆப்பிரிக்க நாடுகள்

1 Min Read

அடிஸ் அபாபா, ஆக. 24- உலக வரைபடங்களில் ஆப்பிரிக்கக் கண்டம் சிறியதாகக் காட்டப்படுவதை எதிர்த்து, ஆப்பிரிக்க ஒன்றியம் ‘சமமான உலக வரைபடம்’ (Equal Earth) என்ற புதிய வரைபட முறையை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த புதிய வரைபட முறை ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை சரியாகப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

மெர்க்கட்டோர் (Mercator) கணிப்பு முறையில் உருவாக்கப்பட்ட உலக வரை படங்கள், ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைவிடச் சிறியதாகக் காட்டுவதாக நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பல பள்ளிகளிலும் தொழில்நுட்பத் தளங்களிலும் பயன்படுத்தப்படும் மெர்க்கட்டோர் வரைபடங்கள் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதாக ஆப்பிரிக்க ஆர்வலர் குழுக்கள் குமுறு கின்றன.

“மெர்க்கட்டோர் கணிப்பைப் பயன்படுத்தும்போது ஆப்பிரிக்காவைப் பற்றி பலரும் தவறான கருத்துகளை நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவின் உண் மையான அளவைக் காட்டுவது, ஆப்பிரிக்க மக்களின் அடையாளத்திற்கும், பெருமைக்கும் மிக அவசியம்” என்று ஓர் ஆர்வலர் குழுவின் நிறுவனர் தெரிவித் தார்.

இந்த சமீபத்திய தனியார் நிறு வனம் செயற்கைகோள் மூலம் அள விடப்பட்டு கொடுத்த புதிய, உலக வரைபடத்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இந்த புதிய வரைபடத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், உலகின் பல இடங்களில் பயன் படுத்தப்படும் மெர்க்கட்டோர் வரைபட முறைகள் விரைவில் மாற்றப்படும் என ஆர்வலர் குழுக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *