எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தொல்லை குறிப்பாக தமிழ்நாட்டுக்கு உரிய நிதிஒதுக்குவதில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

3 Min Read

சென்னை, ஆக. 24- ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை கலை வாணர் அரங்கில் நேற்று (23.8.2025) நடந்தது.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:-

குறுகிய அரசியல் நோக்கம்

நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி. வரிகளிலும் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகிற தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரும் நிதிப்பகிர்வுத் தொகையில், ஒன்றிய அரசு உரிய நிதிப்பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலமாக காஷ்மீரும் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு, அரசமைப்பு சட்ட விதிகளை மீறி அதை ஒன்றிய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி, அரசமைப்பு சட்ட விதிகளை மீறி அதை ஒன்றிய அரசின் நேரடி யான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக அறிவித்தார்கள்.

இது போன்ற மாநிலங்களு டைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டக்கூடாது என்ற உணர்வில்தான், கடந்த 50 ஆண்டுகளில் கூட்டாட்சிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வு களை ஆராய்ந்து, உரிய அரச மைப்புச் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவை நியமித் திருக்கிறோம்.

அதுபோன்ற நீதிபதி சர்க்காரியா குழு 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், ஒரேயொரு இடத்தில் மாநிலங்களுக்கு ஆதரவாக சொல்லியிருப்பது என்னவென்றால், “இந்தியாவில் பொதுவாக பெருமளவில் அதிகார குவிப்பு நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்குப் பயனுள்ள வகையிலும், மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளு ரத்தசோகையும் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவு, நோயுற்ற தன்மையும், திறமையின்மை யும்தான் வெளிப்பாடாக உள்ளது. உண்மையில், அதி காரக்குவியல் என்பது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதை அதிகப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தொடர் தொல்லை

சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பிறகும், நாடாளுமன்றத்தில் பல சட்டங்களின் வழியாகவும், அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் வழியாகவும் ஒன்றிய அரசிடம் பல அதிகாரங்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றன.

அய்க்கிய முற்போக்கு கூட் டணி ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகளை நிலைநிறுத்த ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியதை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி புஞ்சி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந் துரைகளில் மிக முக்கியமானது, நடுநிலையானவரை ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான். அந்த ஒரு ஆலோசனையைக் கூட ஒன்றிய அரசு இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை, தமிழ்நாட்டில் தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற எண்ணற்ற சட்டக்குறுக்கீடுகள், நிர்வாகக் குறுக்கீடுகள்

வழியாகவும், பா.ஜனதா அல்லாத எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை தரப்படுகிறது.

இந்தி எதிர்ப்பு

நிதி ஆணையங்கள் சுதந்திர மாக செயல்படுவதையும் ஒன்றிய அரசு தடுக்கிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய, நியாயமான நிதி பங்கீட்டை மறுக்கிறது. நிதிப் பற்றாக்குறை காலத்தில்கூட சிறந்த முறையில் நிதி மேலாண்மை செய்து 2024-2025ஆம் ஆண்டில், 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்கு பிறகு அடைந்திருக்கிறோம்.

இந்தித் மொழியை திணிப்ப தில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படு கின்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு, மாநில உரிமை முழக்கத்தை இப்போது இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இது இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கின்ற மாபெரும் மாற்றம்.

சுயாட்சி கொள்கை

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கைத் திட்டம்தான் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மேலும் வலிமைப்படுத்தும். அதற்கான அரசமைப்பு சட்டத் திருத்தத்தை பெற முயற்சி செய்ய வேண்டும். தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட இந்தியா வலிமை பெறும்.

பலவீனமான மாநிலங்களால் இந்தியாவை உயர்த்த முடியாது. எனவே, இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையான அக்கறை கொண்ட எல்லோரும் மாநில சுயாட்சி கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அமைத்த குழு போல அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குழு அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *