டோக்கியோ, ஆக. 23- மத்திய ஜப்பானின் தோயாகே நகரில், அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களுக்குப் பிறகு, நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டு, அது தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
வரம்பற்ற அலைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் உடல் மற்றும் மனநலச் சிக்கல்களைத் தடுப்பதே இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “தற்போதைய சூழலில், நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அலைபேசி பயன்படுத்துவது சாத்தியமில்லை” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சட்டம், தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாடு குறித்த விவாதத்தை ஜப்பானில் மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.