திருத்துறைப்பூண்டி, ஆக. 22– திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் (20.08.2025) மாலை 6:00 மணியளவில் சீனி வாசராவ் மணிமண்டபம் அருகில்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, செங்கல்பட்டு மாநில மாநாட்டு விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் சு.சித் தார்த்தன் தலைமைஏற்று உரையாற்றினார். அனை வரையும் ஒன்றிய செயலாளர் இரா.அறி வழகன் வரவேற்று உரை யாற்றினார்
தொடக்க உரையாக இளம் பேச்சாளர் வே. அறிவழகன், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ண மூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலா ளர் வீ.மோகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் ஆகியோர் உரைக்கு பின் கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் உரை யாற்றினார்.
நிகழ்விற்கு ஒன்றிய தலைவர் ச.பொன்முடி முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.
இந்த கூட்டத்தில் நகர துணை செயலாளர் ப.சம்பத்குமார், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சு.உமா சங்கர்,நகர இளைஞரணி செயலாளர் ஆ.சந்தோஷ் , மாராச்சேரி சுரேஷ், திருக்குவளை ரெங்கநாதன் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் நன்றி கூறினார்.