புதுடில்லி, ஆக.22- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இ0ந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ரயில்வே புகார்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயில் நீண்ட தூர ரெயில்களில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த செயல்திறன் குறித்து தணிக்கை அறிக்கை விவரிக்கிறது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
நீண்ட தூர ரயில்களின் கழிப்பறைகள் தூய்மை குறித்து, 96 ரயில்களில் பயணத்தின் போது 2 ஆயிரத்து 426 பயணிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் பயணிகளிடையே திருப்தி நிலை 5 மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும், 2 மண்டலங்களில் 10 சதவீதத் துக்கும் குறைவாகவும் இருந்தது.
2022-2023-ஆம் ஆண்டில் ரயில்களின கழிப்பறைகளில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக மொத்தம் 1 லட்சத்து 280 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் 33 ஆயிரத்து 937 புகார்களில் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நேரம் எதிர்பார்த்த காலக்கெடுவை மீறியதாக இருந்தது.
ரயில் பெட்டிகளில் தண்ணீர் இல்லை என அடிக்கடி பொதுமக்களின் புகார்கள் வருகிறது. ரயில் நிலையங்களில் போதுமான அளவு நீர் நிரப்ப தவறியதே இதற்கு காரணமாகும். விரைவான நீர்நிரப்பும் ஏற்பாடு 109 ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது. 81 நிலையங்களிலேயே இந்த பணிகள் செயல்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ரேஷன் கார்டுக்கு ரூ.5,000
தமிழ்நாடு அரசு தகவல்
பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி அன்று வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ரூ.10,000 கோடி தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம். தீபாவளிக்கு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.