வணக்கம், 50 ஆண்டு கால தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி கலைஞர் என்ற தலைப்பில் திருவாரூர் திராவிடர் கழகம் நடக்கும் ஸநாதன எதிர்ப்பு திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கடலென கூடிய மக்கள் கூட்டத்தில பேசிய ஆற்றல்மிக்க உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
அரசியல் பின் புலமும், எதிர்பார்ப்பும் இன்றி ஓடி வரும் பெண்ணே: ஓடி வரும் இந்திk் பெண்ணே, நீ நாடி வரும் நாடு இதுவல்ல என்று திருவாரூர் தெற்கு வீதியில் இந்தி திணிப்புக்கு எதிராக பதாகை ஏந்திய 13 வயது பிஞ்சு இளைஞன் தான் தமிழ்நாட்டை அய்ந்து முறை ஆண்ட தன்னிகரற்ற தலைவன் கலைஞர் கருணாநிதி. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி வீரமணி முன்னிலையில் 50 ஆண்டு கால தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி கலைஞர் என்ற உரைவீச்சு ஆரவாரத்துடன் இந்த வீதிக்கு கலைஞர் பெயர் வைப்பதே பொருத்தமானது என்ற கோரிக்கையுடன் முடித்த Periyar Vision OTT இல் காட்சி கண்டேன் மாட்சி கொண்டேன். தவறாமல் நீங்களும் பாருங்கள்.
-கே சத்தியமூர்த்தி
திருவள்ளூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com