செய்யாறு, ஆக.21- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆரணி கூட்ரோடில் 18.8.2025 மாலை 6.30 மணியளவில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங்கட்ராமன், செயலாளர் என்.வி.கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் தொடக்கவுரை ஆற்றினார்.
திராவிடர் கழக சொற் பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றுகையில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல் பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு பற்றி விரிவாக பேசினார்.
நகர திராவிடர் கழகத் தலைவர் தி.காமராசன், மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர், சேத்துப்பட்டு அ.நாகராஜன், சென்னை அரும்பாக்கம் தாமோதரன், பொக்கை சமுத்திரம் பி.பரந்தாமன், சிறுநல்லூர் து.சின்னதுரை, நகர செயலாளர் என்.சீனுவாசன், பெருங்களத்தூர்
இரா.சிவக்குமார் ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் தங்கம் கே.பெருமாள் நன்றி கூறினார்.