காரைக்குடி, ஆக.21 காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு -3 16.08.2025 அன்று காரைக்குடி குறள் அரங்கில் நடைபெற்றது.
விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில்,
மாவட்ட கழகத் தலைவர் வைகறை, மாவட்ட கழக செயலாளர் சி. செல்வமணி முன்னிலையில் நடை பெற்றது. விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஆ. பழனிவேல் ராசன் வரவேற்புரை ஆற்றினார்.
தொடக்க உரையாற்றிய அறிவியலாளர் முனைவர் எஸ். நடராஜன் தனதுரையில், மனித குல வரலாற்றில் பாகுபாடுகள் எங்கே தோன்றியன இனங்கள், மதங்கள் என பல்வேறு பிரிவினைகள் எவ்வாறு உருவாகியது , இந்தியாவில் வர்ணாசிரம அடிப்படையில் ஜாதி படிக்கட்டு முறை எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவியல் நோக்கில் சிறப்பாக எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘‘ஜாதியை ஒழிக்கவே இட ஒதுக்கீடு!’’
என்ற நூலை திறனாய்வு செய்து உரையாற்றிய மாணவ இளம் பேச்சா ளர் நா. நவீன் தனது உரையில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான் தேச ஒற்றுமைக்கான மருந்து என்ற தந்தை பெரியார் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கிய சமூக நீதிப் போர் நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி அரசியல் மாற்றத்தையும் அதனால் விளைந்த சமூக பொருளாதார ஏற்றத்தையும் எடுத்துச் சொல்லி, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல இதன் முக்கிய நோக்கம், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதும், சமூக நீதியை நிலைநாட்டுவதுமாகும், இட ஒதுக்கீடு என்பது ஜாதி ஒழிப்புக்கான மாற்றுப் பாதை என்கிற ஆசிரியர் தமிழர் தலைவரின் கூற்றையும் தெளிவாக விளக்கி உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட ப.க துணைத்தலைவர் முனைவர் செ. கோபால் சாமி, ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, மாவட்ட ப. க துணைத்தலைவர் அ.அரவரசன், தேவகோட்டை நகர தலைவர் வீ. முருகப்பன், காரைக்குடி மாநகர கழக செயலாளர் அ. பிரவீன் முத்துவேல், இளம் பேச்சாளர்கள் கு. சுமித்ரா, அ. மாதரசி, முகமது கைஃப், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ச.சிதம்பரம், பா. தினேஷ் வரன், வ. பாரதி, சத்தியமூர்த்தி, சந்தோஷ், மு. அப்துல் ரஹீம், மு. ராஜா முகமது, சிறீ நடராஜன், சு. ராம்குமார், நா. சாந்தி, லெ. தாமோதரன், லெ. வினோத், இரா. உமா மகேஸ்வரி, ரா. எப்சியா ஆகியோர் பங்கேற்றனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ் நன்றி உரையாற்றினார்.