விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி
அய்தராபாத், ஆக. 20- தெலங்கானா மாநிலம் அய்தராபாத் அருகே உள்ளது பண்ட்ல குடா பகுதியில். நேற்று முன்தினம் (18.8.2025) நள்ளிரவில் சில பக்தர்கள் ஒரு இடத்தில் வழிபாட்டிற்கு வைப்பதற்காக பிரமாண்ட விநாயகர் சிலையை வாகனத்தில் எடுத்து சென்றனர்.
வாகனம் இந்த பகுதியில் வந்தபோது உயர்அழுத்த மின்கம்பி விநாயகர் சிலை கொண்டு வந்த வாகனத்தில் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த 2 பக்தர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.