நேபிடா, ஆக. 20- உள்நாட்டு மோதல்களால் நிலையற்ற சூழல் நிலவி வரும் மியான்மரில், நாடாளுமன்றத் தேர்தல் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கும் என ராணுவ ஆட்சி அறிவித்துள்ளது. இதற்கான விரிவான தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்ப டும் எனத் தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த துடன், ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளும் ராணுவத்திற்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்தத் தேர்தல் எப்படி நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடை பெறும் என ராணுவ ஆட்சி ஏற்கெனவே அறி வித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.