வாஷிங்டன், ஆக.20- அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். இரண்டு நாட்களுக்குள் அமெரிக்காவில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு இது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய தாக சந்தேகிக்கப்படும் நபர், தனது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கண்ட ெடுக்கப்பட்டுள்ளார். மற் றொருவர், அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்துள்ளார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களின் அடை யாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த இரண்டு நாட் களுக்கு முன்பு, வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தத் துப்பாக் கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.