காசாங்காடு, ஆக. 20- 17.8.2025 அன்று மாலை 6 மணிக்கு காசாங்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பரப்புரை கூட்டம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.ப.சிதம்பரம் தலைமையில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் முத்து துரை ராஜன் வரவேற்புரையு டன் மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட கழக செயலாளர் மல்லிகை
வை. சிதம்பரம், இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் இரா.கலைச்செல்வன், திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் அ.செல்வநாயகி ஆகியோர் முன்னிலையில் கழக சொற்பொழிவாளர் வழக் குரைஞர் சு.சிங்காரவேலர் 40 நிமிடம் சுயமரியாதை இயக்கத்தால் நாம் பெற்ற பயன்களை விளக்கியும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், வருகின்ற அக்டோபர் 4ஆம் நாள் செங்கல்பட்டு மறைமலைநகரில் நடை பெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கழக மாநில மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தும் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.
கூட்டத் தொடக்கத்தில் கழக மாவட்ட துணைச் செயலாளர் சோம.நீலகண்டன் மந்திரமல்ல? தந்திரமே! என்கின்ற சிறப்பானதொரு அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.
கூட்டத்தில் பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் புலவஞ்சி வழக்குரைஞர் இரா. காமராஜ், கழகப் பொதுக்குழு உறுப்பி னர் பேராவூரணி இரா. நீலகண்டன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட புரவலர் என். கே. ஆர். நாராயணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் மாணிக்க சந்திரன், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் புலவஞ்சி பெ. அண்ணாதுரை, பகுத்தறி வாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் மா.சிவஞானம், கிளை தி. மு. க. செயலாளர் ஆ.முனியப்பன், பொதுவுடமைக் கட்சி பொறுப்பாளர் ஆ. துரைராஜ், மதிமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சி. சுந்தரவடிவேல், மதுக்கூர் ஒன்றிய கழக துணை செயலாளர் நா.வை.இராதாகிருஷ்ணன், மதுக்கூர் நகர கழக பொறுப்பாளர் பாலா, மண்டல கோட்டை கழகப் பொறுப்பாளர் சரவணன், மேனாள் மாவட்ட துணை தலைவர் கு.சிவாஜி, மன்னார்குடி கழகத் தோழர் வணங்காமுடி, கழக இளைஞரணி பொறுப்பாளர் பகுத் தறிவு துரைராஜ் உள் பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகுத்தறிவாளர் கழக காசாங்காடு கிளைக் கழக பொறுப்பாளர் அ. மணிவண்ணன் நன்றி கூறினார்.
பொதுக்கூட்டத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், மாவட்ட கழகத் துணை தலைவர் முத்து துரைராஜ்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மன் னங்காடு மா. சிவஞானம், பகுத்தறிவு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர்.