வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும்பெயரைச் சேர்க்க ஆதாரை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம் தோ்தல் ஆணையம்

2 Min Read

புதுடில்லி, ஆக. 20 பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க ஆதார் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் நேற்று (18.8.2025) அறிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்ட 65 லட்சம் பேர் சார்பில் சமர்ப்பிக்கப்படும் ஆட்சேபங்கள் அல்லது பெயரை மீண்டும் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் பரிசீலித்து தீர்வளிக்க, தகுதி ஆவணங்கள் பரிசீலனைக்குப் பிறகு 7 நாள்கள் அவகாசம் உள்ளது. எனவே, இந்தக் கால அவகாசத்துக்கு முன்பாக எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் பெயரைச் சேர்க்க போதிய நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு, வாக்காளர் பதிவு அலுவலரால் வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் நீக்கமுடியாது.

நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியல் பீகார் மாநில மாவட்ட ஆட்சியர்களின் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபம் தெரிவிக்க அல்லது வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயரைச் சேர்க்கக் கோரும் நபர்கள் தங்களின் விண்ணப் பத்தை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இதுதான் நேர்மையான அரசோ?

 2022–2023 நிதியாண்டில் ரயில்வே செலவினங்கள் குறைத்துக் காட்டப்பட்டுள்ளன

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்துகிறார்

இந்தியா

புதுடில்லி, ஆக.20- ரயில்வேயின் 2022-2023-ஆம் ஆண்டு வருவாய் மற்றும் செலவின அறிக்கையை ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் 2022-2023-ஆம் ஆண்டில் ரயில்வேயின் பணிச்செலவினம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் குறைத்து காட்டப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக ரயில்வேயின் மொத்த பணிச்செலவினம் ரூ.2,37,659.59 கோடி எனவும், பயணிகள், சரக்கு உள்ளிட்ட சேவைகள் மூலம் 2,40,176.96 கோடி எனவும் கூறியுள்ள தலைமை கணக்கு  தணிக்கை அதிகாரி, இதன் மூலம் ரூ.2.57.38 கோடி உபரி வருவாய் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மறுபுறம் பயணிகள் மற்றும் பிற பயிற்சி சேவைகளின் மானியம் தொடர்பான நிதி பதிவுகள், அனைத்து வகையான ரயில்களின் செயல்பாடுகளின் மொத்த செலவு ரூ.2,45,393,71 கோடி என்றும், அனைத்து ரயில்கள் மற்றும் பல்வேறு சேவைகளிலிருந்து மொத்த செலவு ரூ.2,40,136.64 கோடி என்றும், இதனால் ரூ.5,257 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *