புதுடில்லி, ஆக. 20- மியான்மர், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தபடி சிலர் இணையதள மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பணப் பரிவர்த் தனைக்காக இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 1,47,445 வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஜனவரி மாத நிலவரப்படி இந்த எண்ணிக்கை 80,465 ஆக இருந்தது.
குறிப்பாக, மும்பை (26,255), டில்லி (19,296), குர்கான் (13,513), பெங்களூரு (12,439), கொல்கத்தா (8,527), ஜெய்ப்பூர் (3,869), புனே (3,264), அய்தராபாத் (2,959), லக்னோ (2,732) ஆகிய நகரங்களில் உள்ள வங்கிக் கணக்குகள் மூலம் அவர்கள் பணம் பெறு தல், வேறு கணக்குக்கு மாற்றுதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுதவிர, சென்னை (2,605), பாட்னா (2,384), டில்லி (2,334) மற்றும் அகமதாபாத் (2,231) நகரங்களைச் சேர்ந்த வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்தி உள்ளனர்.
இணைய குற்றவாளிகள் செயல்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் கணக்கு வைத்திருப்பவரின் அறியா மையை தங்களுக்கு சாதக மாக பயன்படுத்தி உள்ளனர். இது சட்டவிரோத செயல் ஆகும். இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை பல் வேறு இணைய வழி குற்றங் கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடை பெற்றுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.