“பாஜக செய்தித் தொடர்பாளராகவே மாறிய தலைமைத் தேர்தல் ஆணையர்” பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர்கள் குற்றச்சாட்டு

1 Min Read

இந்தியா கூட்டணியின் தலை வர்கள் நேற்று (18.8.2025) அரசி யலமைப்பு கிளப்பில் நடத்திய பத்திரி கையாளர் சந்திப்பில், முதன்மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கட்சி சார்பு நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கவுரவ் கோகோய் (காங்கிரஸ்): “தலைமைத் தேர்தல் ஆணையரால், எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடிய வில்லை, மாறாக தனது பொறுப்பி லிருந்து தப்பிக்க முயன்றார். அதற்கா கவே எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தினார்.”

மஹுவா மொய்த்ரா (திரிணா முல் காங்கிரஸ்): “இது தலைமைத் தேர்தல் ஆணையரின் அவமானகரமான கைப்பாவை நாடகம். எதிர்க்கட்சி களைத் தாக்கும் வேலையை, அவரது அரசியல் எஜமானர்களிடம் (பாஜகவிடம்) விட்டுவிட வேண்டும்.”

ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி): “2022 இல் 18,000 பிரமாணப் பத்திரங்களுடன் சமாஜ்வாதி கட்சி யின் ஆதரவாளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாக புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை எதுவும் நடக்க வில்லை.”

அரவிந்த் சாவந்த் (சிவசேனா-உபிடி): “தலைமைத் தேர்தல் ஆணை யர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நடந்து கொண்டார். மகாராட்டிராவில் 5 மாதங்களில் 70 லட்சம் வாக்குகள் எப்படி சேர்க்கப்பட்டன என்பதற்கு அவரிடம் பதிலில்லை.”

மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்): “தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டது. பீகாரில் நேற்று தொடங்கிய வாக்காளர் உரிமைப் பயணத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்றே தலைமைத் தேர்தல் ஆணையர் 17.8.2025 இல் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.”

ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): “தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தப் பதவியில் இருக்கும் உரிமையை இழந்துவிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவர் போரை அறிவித்துள்ளார்”.

இவ்வாறு தலைவர்கள் குறிப்பிட்ட னர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *