ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள வ.உ.சி.நகர் முனிஸ்வர் சந்திப்பு பகுதிக்கு ‘தந்தை பெரியார் சதுக்கம்’ என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 21.01.2025 மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்களால் திறந்துவைக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத யாரோ (பெரியார் சதுக்கம் பெயரை அகற்ற வேண்டும் என பிஜேபி சங்பாரிவார அமைப்பினர் தொடர்ச்சியாக அரசுக்கு தொல்லை கொடுத்து வரும் நிலையில்) எலுமிச்சம் பழம் நறுக்கி குங்குமம் கலந்து பெயர்ப்பலகை அருகில் போட்டுச் சென்றுள்ளனர்.‘பெரியாருக்கே மந்திரமா?’ என அப்பகுதி பொதுமக்கள் நகைப்புடன் கடந்து செல்கின்றனர்.
இருட்டு வேளையில் திருட்டு வேலை செய்யும அநாகரிகவாதிகள் இன்னும்் இருக்கத்தானே செய்கிறார்கள்!