எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகாரில் பேசிய அவர், பாஜக உண்மையான ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தாது எனவும், 50% எனும் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி யமைத்ததும் 50% உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தவர்கள்
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்!
– கார்கே
சுதந்திர போராட்ட வீரர்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டு எழுந்து விடுவார்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு பங்கு உண்டு என மோடி சுதந்திர நாள் உரையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய கார்கே. சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை ஆங்கிலேயர் களுக்கு அளித்த வர்கள் ஆர்.எஸ்.எஸ். என்றும், அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு அளித்த தாகவும் தெரிவித்தார்.
அமலாக்கத் துறையால் முடியாததால்
தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது
– தேஜஸ்வி
பீகார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ் சாட்டி யுள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.அய். வருமான வரித்துறை தோல்வியை சந்தித்ததால் பாஜக தேர்தல் ஆணையத்தை களமிறக்கி விட்டுள்ளதாகவும், வாக்கா ளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளை திருட முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 65 இலட்சம் மக்களின் வாக்குகள் நீக்கப் பட்டுள்ளதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளார்.
காதலிக்காக மனைவியை துடிதுடிக்கக் கொன்ற
பிஜேபி தலைவர்!
காதலியுடன் பழக மனைவி இடையூறாக இருந் ததால், பிஜேபி தலைவர் தனது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீரில் ரோஹித் சைனி (28), சஞ்சுவை (25) கொலை செய்து, அதனை கொள்ளைச் சம்பவம் போல செட்டப் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், காவல்துறையினர் விசாரணையில் ரோஹித்தின் காதலி ரிது சைனியின் (25) வற்புறுத்தலின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரோஹித் இந்த கொலையைச் செய்ததாகத் தெரிய வந்துள்ளது.